தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமான சமந்தா 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வரை தமிழில் தொடந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது. 4 ஆண்டுகள் ஒன்றாக இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா 2ஆவதாக சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமந்தா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஆனால், அவர் திருமணமான இயக்குநருடன் உறவில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. பாலிவுட் இயக்குநரான ராஜ் நிடிமொரு உடன் நெருக்கமாக பழகி வருவதற்கு ஆதாரமாக சில வீடியோக்களும் வெளியானது. இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, இயக்குநர் ராஜ் நிடிமொருவின் மனைவி ஷியாமலி டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபமாக பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இந்த புகைப்படம் தொடர்பாக தன்னிடம் விசாரித்த அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது கர்மா என்று குறிப்பிட்டு மற்றொரு பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், நீங்கள் செய்த நல்லவற்றிற்காக கர்மா உங்களை ஆசீர்வதிக்கும். அதே போன்று தீய செயல்களுக்காக கர்மா உங்களை பின்தொடரும். உங்களது ஆன்மா மலரட்டும் என்று பதிவிட்டுள்ளார். அதே போல் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் என இவர் கூறியுள்ளது சமந்தாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஜெயம் ரவி -ஆர்த்தி சம்பவத்திற்கு பின்னர் இப்போது இந்த விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.