முதியவர்..


மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்த 61 வயது முதியவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.


மேலும் படிக்க: Crime: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்.. 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி சம்பவம்


இறந்தவர் தனது காதலன் என்று 40 வயது பெண் கூறியுள்ளார். அப்பெண்ணுடன் காலை 10 மணியளவில் புறநகர் குர்லாவில் உள்ள ஹோட்டலுக்கு முதியவர் சென்றார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் ஹோட்டலின் வரவேற்பறையைத் தொடர்புகொண்டு, அந்த நபர் மயங்கி விழுந்துவிட்டதாகவும், பதிலளிக்கவில்லை என்றும் அவர்களுக்குத் தெரிவித்தார்.


உயிரிழப்பு..


ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் முதியவரை சியோனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக குர்லா காவல் நிலைய அதிகாரி கூறினார்.




பின்னர் அந்த பெண்ணை குர்லா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த நபர் வொர்லியில் வசிப்பவர் என்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். உடலுறவின் போது, ​​அவர் மது அருந்த முயன்றார். ஆனால் அவர் மயங்கி விழுந்தார் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க: WhatsApp: ஒரே ரூமில் தங்குவதில் காதலனுடன் பிரச்சினை! காதலியின் உயிரைப்பறித்த வாட்ஸ் அப்!


"முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் விபத்து இறப்பு அறிக்கையை பதிவு செய்துள்ளோம். மேலும் மரணத்திற்கான சரியான காரணத்தை அறியவும், செயலுக்கு முன் அவர் ஏதேனும் மாத்திரையை உட்கொண்டாரா என்பதைக் கண்டறியவும் அவரது மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்றும் அதிகாரி கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண