Cinema News Today LIVE : ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட ராம் சரண்!
சினிமா வட்டாரத்தில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி உடனுக்குடன் அப்டேட் இங்கே!
தற்போது, ஆஸ்கர் விருது விழாவில் பங்குபெற ராம் சரண் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட ராம் சரணின் புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.
ஏகே 62 படக்குழுவினர் குறித்த தகவலும், படத்தின் டைட்டிலும் லைகா நிறுவனத்தின் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை மகிழ்திருமேணி இயக்க, அனிரூத் இசையமைப்பார் என சொல்லப்பட்டு வருகிறது. அத்துடன் வில்லன் கதாபாத்திரத்தில், அருண் விஜய் அல்லது அருள்நிதி நடிப்பார் என்றும் தகவல் பரவிவருகிறது.
லியோ படத்தின் ஷூட்டிங் நடக்கும் காஷ்மீரில் லெஜண்ட் சரவணன் உள்ளார்.
ஷாருக்கான் நடித்த பதான் படம், 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இதன் மூலம், இந்திய சினிமாவின் 1000 கோடி ரூபாய் க்ளப்பில் இடம்பெற்ற தங்கல், பாகுபலி 2, ஆர் ஆர் ஆர், கே.ஜி.எஃப் 2 வரிசையில் பதான் படமும் இணைந்துள்ளது.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், பிரம்மாஸ்திரா (பாகம்) படத்திற்காக சிறந்த வில்லன் நடிகைக்கான விருதை மெளனி ராய் பெற்றுள்ளார்.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், சுப் படத்திற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை துல்கர் சல்மான் பெற்றுள்ளார்.
”தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான விருதை தி காஷ்மீர் ஃபைல்ஸ் வென்றது. இந்த விருதை, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் அர்ப்பணிக்கின்றேன்.” என காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்திரி ட்வீட் செய்துள்ளார்.
ஜாக்சன் துரை இரண்டாம் பாகம் குறித்து, சிபி சத்யராஜ் கூறியதாவது : அப்பாவுடனும் என் அதிர்ஷ்டமான அணியுடனும் மீண்டும் கை கோர்ப்பதில் மகிழ்ச்சி.
Sanjay Leela Banjali : "என் வாழ்க்கையில் 30 வருடங்களை, பாலியல் தொழில் கூடங்களுக்கு பக்கத்தில் கழித்திருக்கிறேன்” - கங்குபாய் கத்தியாவாடி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், ஆண்டின் சிறந்த படத்திற்கான விருதை ஆர் ஆர் ஆர் பெற்றுள்ளது.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், சுப் படத்தை இயக்கிய ஆர் பால்கி சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றுள்ளார்.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், பிரம்மாஸ்திரா (பாகம் 1) படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ரன்பீர் கபூர் பெற்றுள்ளார்.
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான விருது தி காஷ்மீர் ஃபைல்ஸ் பெற்றுள்ளது
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஆலியா பட் பெற்றுள்ளார்.
”மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்” - மநீம தலைவர் கமல்ஹாசன்
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் கருணாஸிற்கு, இன்றுடன் 53 வயதாகிறது.
மதராசி, முனி, காலை, பரதேசி ஆகிய படங்களில் நடித்த வேதிகா இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த வாரத்தில் விஜய்யின் வாரிசு படம் அமேசான் ப்ரைமிலும், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படம் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரிலும், மாலிவுட்டிலிருந்து தங்கம் படம் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரிலும், மம்மூட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் படம் நெட்ஃபிளிக்ஸிலும், We Have a Ghost எனும் ஹாலிவுட் படம் நெட்ஃபிளிக்ஸிலும் வெளியாகிறது.
Background
நடிகர் விஜய்யின் வாரிசு உட்பட பல மொழிகளில் வெளியான திரைப்படங்கள், தொடர்கள் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா காலக்கட்டத்திற்குப் பின் இந்தியாவில் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. தியேட்டர்களில் எந்தப்படம் ரிலீஸ் ஆகிறது என்பதைப் போலவே ஒவ்வொரு வாரமும் எந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸாகிறது என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை சரியாக கணித்துக் கொண்ட நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளங்கள் சமீப காலமாக அதிகளவிலான தொடர்கள் மற்றும் படங்களை வெளியிட்டு வருகிறது.
வாரிசு
வம்சி பைடிபள்ளி இயக்கிய வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக விஜய்யும், ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இணைந்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வசூலில் ரூ.300 கோடியை தொட்ட இப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
வீரசிம்ஹா ரெட்டி
தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் வீர சிம்ஹா ரெட்டி. கோபிசந்த் மலினினி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, ஹனிரோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வீரசிம்ஹா ரெட்டி படம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதனிடையே இப்படம் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகிறது.
தங்கம்
திருச்சூரில் தங்க வர்த்தகத்தில் பணிபுரியும் மூன்று நண்பர்களை மையமாக வைத்து மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் தங்கம். இப்படத்தில் பிஜு மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், மற்றும் வினீத் தட்டில் டேவிட் ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜனவரி 25ந் தேதி திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
நண்பகல் நேரத்து மயக்கம்
மலையாளத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் நண்பகல் நேரத்து மயக்கம். இப்படத்தில் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகிறது.
We Have a Ghost
ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் லேண்டன் இயக்கத்தில் டேவிட் ஹார்பர், ஜெனிஃபர் கோலிட்ஜ், ஆண்டனி மேக்கே உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் We Have a Ghost.வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பேயிடம் இருந்து ஒரு குடும்பம் எப்படி தப்பிக்கிறது என்பதே இதன் கதையாகும். பிப்ரவரி 24 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியாகிறது.
அதுமட்டுமல்லாமல் டிஸ்னி ஹாட் ஸ்டாரில், ஆதித்யா ராய் கபூர் நடித்த தி நைட் மேனேஜர், ஹன்சிகாவின் கல்யாண சீரிஸான லவ் ஷாதி டிராமா ஆகிய தொடர்களும் ஒளிபரப்பாகிறது. மேலும் ஆபரேஷன் ஃபைனல் (நெட்பிளிக்ஸ்), கால் இட் லவ் (ஹாட் ஸ்டார்), ஸ்னோஃபால் சீசன் 6 (ஹாட் ஸ்டார்), தி கன்சல்டண்ட் (அமேசான்) என படங்களும், தொடர்களும் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -