Cinema News Today LIVE : சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடக்கும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் இங்கு காண்போம்.

தனுஷ்யா Last Updated: 23 Feb 2023 06:19 PM
Shruthi Haasan : சலார் படப்பிடிப்பை முடித்த ஸ்ருதி!

கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில், பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் உள்ளனர். தற்போது, ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.  ஸ்ருதி வெளியிட்ட புது புகைப்படம்.



 

Baasha : புதிய வரலாறு படைத்த பாட்ஷா..!

ரஜினிகாந்தின் பாட்ஷா படம் செய்த சாதனையை பற்றி அறிந்து கொள்ள இதை அழுத்தவும்

Vaathi : வாத்தி பாடலின் தனுஷ் வெர்ஷன் ரிலீஸ்!

வாத்தி படத்தில் இடம்பெற்ற வா வாத்தி பாடலின் தனுஷ் வெர்ஷன் வெளியாகியுள்ளது.


Raja Rani 2 : ராஜா ராணி சீரியல் ஹீரோயின் ரியா மாற்றப்பட்டது ஏன்?

ராஜா ராணி சீரியல் ஹீரோயின் ரியா மாற்றப்பட்டது ஏன் என்பதை தெரிந்து கொள்ள : Raja Rani: ராஜா ராணி சீரியல் ஹீரோயின் ரியா மாற்றப்பட்டது எப்படி..? இதுதான் காரணம் ரசிகர்களே..!

Taapsee Pannu : வொர்க் அவுட் செய்யும் டாப்சியின் லேட்டஸ்ட் போட்டோ!

ஆடுகளம் நாயகின் வொர்க் அவுட் புகைப்படம்



N. T. Rama Rao Jr : சிறந்த ஆக்‌ஷன் நடிகராக பரிந்துரை செய்யப்பட்ட ஜுனியர் என்.டி.ஆர்!

க்ரிட்டிக்ஸ் சூப்பர் விருதுகளில், சிறந்த ஆக்‌ஷன் நடிகருக்கான பிரிவில் ஜுனியர் என்.டி.ஆர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.



Chandramukhi 2 : முழுசாக சந்திரமுகியாக மாறிய வடிவேலு!

சந்திரமுகி 2 படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம்



Captain Miller : தனுஷ் படத்தில் நடிக்கவிருக்கும் உறியடி இயக்குநர்!

உறியடி இயக்குநர் லெனின் விஜய், தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது.

Ram Charan : சிறந்த ஆக்‌ஷன் நடிகராக பரிந்துரை செய்யப்பட்ட ராம் சரண்!

க்ரிட்டிக்ஸ் சூப்பர் விருதுகளில், சிறந்த ஆக்‌ஷன் நடிகருக்கான பிரிவில் ராம் சரண் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதே பட்டியலில், டாம் க்ரூஸ், ப்ராட் பிட் ஆகிய ஹாலிவுட் நடிகர்களும் உள்ளனர்.



Kamal Haasan : கமலின் உலகில் மற்றுமொரு சூரியனின் உதயம்

சூரிய உதயத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் கமல் ஹாசனின் புகைப்படம் 



Radhika Sarathkumar : ராதிகா சரத்குமாரின் புது க்ளிக்!

சந்திரமுகி 2 படத்தில், ராகாவா லாராண்ஸுடன் ஒன்றாக நடிக்கும் ராதிகா சரத்குமார், ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்டோ எடுத்துள்ளார்.



Chandramukhi 2 : சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்!

ராகாவா லாரண்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்..



Ram charan : அமெரிக்காவின் டாக்‌ஷோவில் ராம் சரண்.!

ஹைதராபாத்திலிருந்து அமெரிக்கா சென்ற ஆர் ஆர் ஆர் நடிகர் ராம் சரண், குட் மார்னிங் அமெரிக்கா என்ற டாக் ஷோவில் பங்குபெற்றுள்ளார்

Achcham enbadhu illayae : அச்சம் என்பது இல்லையே படப்பிடிப்பு நிறைவு

ஏ.எல். விஜய் இயக்கத்தில், அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் நடித்து வந்த அச்சம் என்பது இல்லையே படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது.



Nanpakal Nerathu Mayakkam : ஓடிடியில் வெளியான மம்மூட்டியின் படம்

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம், ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.



Tamannaah Bhatia : கார்திக்கு வாழ்த்து கூறிய தமன்னா!

சினிமா வாழ்க்கையில் 16 ஆண்டுகளை கடந்த கார்த்திக்கு, அவருடன் பையா, சிறுத்தை, தோழா ஆகிய படங்களில் நடித்த தமன்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 





Raghava Lawrence : ராகாவா லாரண்ஸுடன் மஹிமா நம்பியார்

சந்திரமுகி 2 படத்தில், ராகாவா லாராண்ஸுடன் ஒன்றாக நடிக்கும் மஹிமா நம்பியார், ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்டோ எடுத்துள்ளார்.



Thunivu : துணிவு படத்தின் 50 ஆவது நாள் கொண்டாட்டம்

அஜித்தின் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிய துணிவு படத்தின் 50 ஆவது நாள் கொண்டாட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடக்கவுள்ளது. அஜித்தின் ரசிகர்கள் பலர், அதிவேகமாக டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.



AK62 : இணையத்தில் வைரலாகும் ஏகே 62 படத்தின் டைட்டில் போஸ்டர்

ஏகே 62 குறித்த அதிகாரபூர்வ தகவல் வராத நிலையில், அப்படத்திற்கு “டெவில்” என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.



Dhanush : மாஸ் காட்டும் தனுஷின் லேட்டஸ்ட் க்ளிக்!

கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை, சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.



16YearsofKarthiism : 16 ஆண்டுகளை கடந்த கார்த்தி!

பருத்திவீரன் படத்தில் பலரின் மனதை கவர்ந்த கார்த்தி, சினிமா உலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Paruthiveeran : 16 ஆண்டுகளை கடந்த பருத்திவீரன்!

அமீரின் இயக்கத்தில், கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Mozhi : 16 ஆண்டுகளை கடந்த மொழி படம்!

ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ் ராஜ் நடித்த மொழி படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகியுள்ளது.

DC : டிசியின் தி ஃப்ளாஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகெங்கும் ரசிகர்களை கொண்ட டிசியின் தி ஃப்ளாஷ் படம், வருகிற ஜூன் 16 ஆம் தேதி ரீலிஸாகவுள்ளது.

RRR : 200 திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகும் ஆர் ஆர் ஆர்

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஆர் ஆர் ஆர், அமெரிக்காவில் உள்ள 200 திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது.

Sid kiara : சித் கியாராவின் லேட்டஸ்ட் க்ளிக்!

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபல பாலிவுட் ஜோடி சித் கியாராவின் லேட்டஸ்ட் க்ளிக்



Background

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வரும் மார்க் ஆண்டனி ஷூட்டிங்கின்போது விபத்து நிகழ்ந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மார்க் ஆண்டனி:


 த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சிம்புவின் அன்பானவன் அசராதவன்  அடங்காதவன், பிரபுதேவா நடித்த பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது அடுத்த படமாக விஷால், எஸ்.ஜே.சூர்யா. ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம்  மார்க் ஆண்டனி.


இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்து நிகழ்ந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், பட ஷூட்டிங் சமயத்தில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


ஏராளமான துணை நடிகர்கள், பணியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்ற இந்த ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்ட இந்தக் காட்சிகள் கோலிவுட் வட்டாரத்தி பரபரப்பை ஏற்படுத்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.


இந்த விபத்தில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் லாரி நிற்காமல் ஓடியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்திலிருந்து நூலிழையில் தப்பியது குறித்து முன்னதாக விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவருமே பதிவிட்டுள்ளனர். 


உயிர் தப்பிய விஷால்:


நடிகர் விஷால் தனது பதிவில், “வெகு சில நொடிகள் மற்றும் சில அங்குலங்களில் உயிர் தப்பினேன், எல்லாம் வல்ல கடவுளுக்கு நன்றி. தற்போது மீண்டும் ஷூட்டிங் திரும்பியுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் இந்த விபத்து குறித்துப் பதிவிட்டுள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “ஆண்டவனுக்கு மிக மிக நன்றி, நூலிழையில் உயிர் தப்பினோம். தற்செயலாக, நேராக செல்வதற்கு பதிலாக, லாரி குறுக்கே சென்றுவிட்டது. அது நேராக வந்திருந்தால் நாங்கள் இருவரும் இப்போது உயிரோடு இருந்து ட்வீட் செய்திருக்க மாட்டோம். கடவுளுக்கு நன்றி, நாங்கள் அனைவரும் தப்பித்துவிட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.