Thalapathy Vijay: உன்னுடன் வேலை பார்க்க முடியாது.. விஜய்யிடம் வெளிப்படையாக சொன்ன மிஷ்கின்.. என்னாச்சு?
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், நடிகர் விஜய் பற்றி பல விஷயங்களை கூறினார். அப்போது, “விஜய்க்கு தான் சித்திரம் பேசுதடி கதையை எழுதியிருந்தேன். அந்த படம் ஹிட்டான பிறகு படம் பார்த்த விஜய் என்னிடம் வந்து, ‘இந்த மாதிரி படம் எனக்கு சொல்லுங்கண்ணே’ என சொன்னார். நான், விஜய் உங்களுக்கு தான் இந்த கதையை எழுதினேன் என கூறினேன். ஏன் சட்டையை பிடிச்சி சொல்லிருக்கலாம்ல, ஏன் சொல்லல என கேட்டார்.நான் அதற்கு, ‘இல்லப்பா நீ என் கதையை மாத்தியிருப்ப. உங்க அப்பா மாற்றியிருப்பார். நான் வந்து மிஷ்கினாக இருந்திருக்க மாட்டேன். நீ ஒரு சிறந்த மனிதன் தான். ஆனால் எனக்கு என்னுடைய வழியில் வளர்ச்சி என்பது தேவை. என்னால் உன்னுடன் வேலை பார்க்க முடியாது” என சொல்லியதாக மிஷ்கின் அந்த நேர்காணலில் தெரிவித்திருப்பார். மேலும் படிக்க
Vidamuyarchi: அஜர்பைஜான் ஷூட்டிங் ஓவர்.. விறுவிறுப்பான கட்டத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பெரும்பாலான படப்பிடிப்பு துபாய் , அஜர்பைஜான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. மேலும் படிக்க
Rajinikanth: சங்கி கெட்ட வார்த்தைன்னு என் மகள் சொல்லல.. ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக ரஜினி!
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சங்கி என என் அப்பாவை சொல்லாதீர்கள் என மகள் ஐஸ்வர்யா சொன்னது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஆன்மீகவாதி, எல்லா மதங்களையும் விரும்புகிறவர். அவரை ஏன் எப்படி சொல்றாங்கன்னு நினைக்கிறது அவருடைய பார்வை. இது லால் சலாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசப்பட்டது இல்லை’ என ரஜினி தெரிவித்தார். மேலும் படிக்க
AK63 update : ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் கூட்டணி விரைவில்... குட் நியூஸ் சொன்ன பிரபலம்...
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகரான அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே பல மாதங்களாக கசிந்து வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் இப்படம் குறித்த பல தகவல் வெளியான வண்ணமாக இருக்கின்றன. இது தல ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது. மேலும் படிக்க
Rio Raj : கடுப்பாகிட்டார்.. நடிக்க வேணாம்னு சொல்லிட்டாரு.. லோகேஷ் கனகராஜ் குறித்து ரியோ
சன் மியூசிக்கில் ஆர்.ஜேவாக இருந்து, பின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் நடிகர் ரியோ. இயல்பான சுபாவம் , டைமிங் காமெடி என இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் நிறைய நபர்களை கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பரவலான கவனத்தைப் பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் படிக்க