அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின்  அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.


விடாமுயற்சி


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம்  இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பெரும்பாலான படப்பிடிப்பு துபாய் , அஜர்பைஜான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.


காத்திருக்கும் ரசிகர்கள்


விடாமுயற்சி படம் குறித்து தகவல்களை பெரிதும் வெளியே கசிய விடாமல் படக்குழு கவனமாக இருந்து  வருகிறார்கள். இதனிடையில் அஜித் குமார், அர்ஜூன் , ஆரவ் ஆகிய மூவரும் உணவருந்தும் புகைப்படம், வெளி நாட்டில் அஜித்குமார் உலாப் போகும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விடாமுயற்சி படம் தொடர்பாக சின்னதாக தகவல்கள் வெளியானாலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


சமீபத்தில் லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படம் பற்றி எந்த தகவல் வெளியானாலும் ரசிகர்கள் விடாமுயற்சி படம் பற்றிதான் கேட்கிறார்கள் என்று கூறியிருந்தார். சமீபத்தில்  அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அந்த வகையில், ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தை சந்தித்தது குறித்தும், அவருடன் உணவருந்தியது குறித்தும் தமிழரும், அஜர்பைஜானுக்கான இந்திய தூதருமான பயணிதரன் நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.


அடுத்தக் கட்ட படப்பிடிப்பு






 


தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அஜர்பைஜானில் நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


AK 63


விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் AAA, பகீரா உள்ளிட்டப் படங்களை இயக்கினார்.


சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே சூரியா நடித்து அவர் இயக்கியிருந்த மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதும் இல்லாமல் பாக்ஸ் ஆஃபிஸின் 100 கோடி வசூல் செய்ததும் குறிப்பிடத் தக்கது. நீண்ட நாட்களாக தன்னிடம் அஜித்துக்கு கதை இருப்பதாக சொல்லிவந்த ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது தனது கனவை நினைவாக்க இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்