மாமன்னன் போயாச்சு, மாரீசன் வந்தாச்சு...வடிவேலு ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய பட அப்டேட்!


மாமன்னன் படத்தைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மாமன்னன் படம் வெளியாகியது. இதுவரை நகைச்சுவை நடிகராக அனைவரும் பார்த்து ரசித்த வடிவேலுவை புதிய பரிமாணத்தில் காட்டியது மாமன்னன் படம் . நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவருக்கு இது ஒரு பெரிய கம்பேக் ஆக அமைந்தது. மேலும் படிக்க


”இன்னும் 4,5 ஆண்டுகளில் மோசமான இந்தியாவில் இருப்போம்” : இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு


ப்ளூ ஸ்டார் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியான நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.  இதில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், ராமர் கோயில் திறப்பு பற்றி தனது கருத்துகளை தெரிவித்தார். அதில், “ராமர் கோயில் திறப்பு இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதன் பின்னால் இருக்கும் மத அரசியல் பற்றி எல்லாரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். மேலும் படிக்க


பெரியப்பா ஆனார் சிலம்பரசன்... மகிழ்ச்சியில் டி.ஆர். குடும்பம்...!


நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்திரன் தம்பதியினரின் இளைய மகன் குறளரசன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது மகன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த சூழலில் நடிகர் டி ராஜேந்திரன் இதுகுறித்து விளக்கமளித்தார். தனது மகன் சிறிய வயதில் இருந்தே இஸ்லாம் மதத்தின் மீது நாட்டம் கொண்டிந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் படிக்க


ராமர் கோயில் பற்றி ரஜினி பேசியது சரியா தவறா? - பா. ரஞ்சித் சொல்வது என்ன?


ராமர் கோயில் (Ayaodhya Ram Mandhir) நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று அயோத்தி பயணித்த நடிகர் ரஜினிகாந்த், அயோத்தி கோயிலுக்குச் செல்வதும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்து, செய்தியாளர்களிடம் விடைபெற்றார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் சரி, தவறு என்பதை தாண்டி தனக்கு ரஜினிகாந்தின் கருத்தில் விமர்சனம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க


சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி: அரசியல் சாசனத்தை மேற்கோள் காட்டும் மலையாளத் திரையுலகினர்


அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். மேலும் படிக்க


“ஆசீர்வாதமாக உணர்கிறோம்” - ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் உற்சாகம்!


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ள பாடகர் ஷங்கர் மகாதேவன், “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நானும் என் மனைவியும் இந்த கோயில் திறப்பு விழாவில் ஒரு அங்கம் என்பதை ஆசீர்வாதமாக உணர்கிறோம். உலகில் அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதேபோல் இசையமைப்பாளர் அனு மாலிக் கூறுகையில், “இது ஒரு அற்புதமான தருணம். ராமர் கோயிலை கண்டு நான் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன். இது ஒரு பெரிய சந்தர்ப்பம்” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க