Kuralarasn T.R: பெரியப்பா ஆனார் சிலம்பரசன்... மகிழ்ச்சியில் டி.ஆர். குடும்பம்...!

நடிகர் சிலம்பரசனின் சகோதரனான குறளரசன் நபீலா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Continues below advertisement

நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்திரன் தம்பதியினரின் இளைய மகன் குறளரசன் . இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் தனது பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது மகன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த சூழலில் நடிகர் டி ராஜெந்திரன் விளக்கமளித்தார். தனது மகன் சிறிய வயதில் இருந்தே இஸ்லாம் மதத்தின் மீது நாட்டம் கொண்டிந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் தான் எல்லா மதத்துக்கும் பொதுவானவன். நாகூர் தர்கா, வேளாங்கன்னி அம்மன், முருகன் கோயில் என அனைத்து மத ஸ்தலங்களுக்கும் தான் சென்று வருவதாகவும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய குறியீடு என்றும் தனது விளக்கத்தில் அவர் தெரிவித்தார்.

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நபீலா என்பவருடன் குறளரசனுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணமானதைத் தொடர்ந்து நபீலா கருவுற்றார். கடந்த சில தினங்களுக்கு முன் குறளரசன் மற்றும் நபீலா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டி ராஜேந்திரனின் மகளான இலக்கியாவுக்கு கடந்த சில வருடங்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தனது மகள் மூலமாக தாத்தாவாக ப்ரோமோட் ஆன டி ராஜேந்திரன் தற்போது இரண்டாவது முறையாக தாத்தவாகியுள்ளார். மேலும் நடிகர் சிலம்பரசன் பெரியப்பாவாக ஆகியுள்ளார்.

 

. இந்த தகவலைத் தொடர்ந்து டி.ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Continues below advertisement