Maareesan: மாமன்னன் போயாச்சு, மாரீசன் வந்தாச்சு...வடிவேலு ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய பட அப்டேட்!

Maareesan: வடிவேலும் மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மாமன்னன் படத்தைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

வடிவேலு - ஃபகத் ஃபாசில்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மாமன்னன் படம் வெளியாகியது. இதுவரை நகைச்சுவை நடிகராக அனைவரும் பார்த்து ரசித்த வடிவேலுவை புதிய பரிமாணத்தில் காட்டியது மாமன்னன் படம் . நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவருக்கு இது ஒரு பெரிய கம்பேக் ஆக அமைந்தது.

இதைவிட சிறப்பாக இனி வடிவேலுவை யாரும் காட்டிவிட முடியாது என்கிற அளவுக்கு இந்தப் படத்தின் வடிவேலுவின் மாமன்னன் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் கொண்டாடப்பட்டது. மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு நிகராக ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த ரத்தினவேlலு என்கிற தனது கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருந்தார். வடிவேலு ஃபகத் ஃபாசில் என நேருக்கு நேர் இருவரும் இந்தப் படத்தில் மோதியதை பார்த்த ரசிகர்கள் இருவரையும் மீண்டும் ஒருமுறை ஒரே படத்தில் பார்ப்போம் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

மாரீசன்

ஆனால் எதிர்பார்க்காத ஒன்று தான் நம்மை சீக்கிரம் வந்து சேருவது போல் மீண்டும் இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணை சேர்ந்துள்ளது. சுதீஷ் சங்கர் இந்தப் படத்தை இயக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மாமன்னன் படத்தைப் போல் இல்லாமல் இந்தப் படம் ஒரு சாலை பயணத்தை மையமாக வைத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இன்று முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தகவல்கள் மீண்டும் ஒரு முறை வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசிலை சேர்ந்து திரையில் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் தூண்டியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola