வேற மாறி வேற மாறி.. எஸ்.கே 21 பட டீசர் பார்த்து மிரண்டுபோன இயக்குநர் நெல்சன்!


நடிகர் சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவாகி வருகிறது எஸ்.கே 21. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையைமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் படிக்க


ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. அயோத்தி கிளம்பிய ரஜினிகாந்த் உற்சாகம்!


ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நாளை நிறுவ உள்ளார். அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள் வரை இந்த சிறப்பு அழைப்பு பலருக்கும் விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள உத்தரப் பிரதேசம், அயோத்திக்கு ரஜினிகாந்த் இன்று புறப்பட்டுள்ளார். மேலும் படிக்க


கடவுளோடு பேசுவேன்.. தங்கலான் பார்வதி உடைத்த உண்மை..


தங்கலான் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள யூடியூப் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் தங்கலான் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். தங்கலான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறித்து அவர் பேசியபோது “பா.ரஞ்சித்திடம் இருந்து ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. பல மாதங்களாக என்னை தொடர்புகொள்ள அவர் முயற்சித்ததாகக் கூறினார். மேலும் படிக்க


சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க எனக்கு ஆசை.. ராஷ்மிகாவின் விருப்பம் இதுதானா?


தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தனது வசீகரமான அழகாலும், சிறப்பான நடிப்பாலும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த 'அனிமல்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலையும் குவித்து சாதனை படைத்தது. மேலும் படிக்க


குஷ்புவின் 92 வயது மாமியார் தெய்வானையிடம் ஆசிபெற்ற பிரதமர் மோடி


ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் இருக்கும் வைணவ தளங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கேரளா சென்றிருந்த அவர் தற்போது 3 நாள் பயணமாக தமிழக வந்துள்ளார். இந்த பயணத்தின் பகுதியாக சென்னை வந்த அவர் நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிய தொடங்கி வைத்தார். மேலும் படிக்க


நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?


நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான்.  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம் அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோயில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது. மேலும் படிக்க