சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரைப் பார்த்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.


எஸ்.கே 21


 நடிகர் சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவாகி வருகிறது எஸ்.கே 21. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.


ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையைமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.


இப்படியான நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எஸ்.கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.  நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்  நடித்திருந்தார். இந்த இருவரின் காம்பினேஷனை அனைவரும் ரசித்தனர். தற்போது எஸ்.கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பார்கக வெறித்தனமாக இருப்பதாக நெல்சன் கூறி எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளார்.