Rashmika Mandanna : சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க எனக்கு ஆசை.. ராஷ்மிகாவின் விருப்பம் இதுதானா?

Rashmika Mandanna : நடிகை சௌந்தர்யாவின் பயோபிக் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Continues below advertisement

தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தனது வசீகரமான அழகாலும், சிறப்பான நடிப்பாலும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த 'அனிமல்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலையும் குவித்து சாதனை படைத்தது. 

Continues below advertisement

 


ராஷ்மிகாவின் ஷெட்யூல் :

கோலிவுட் சினிமாவில் நடிகர் கார்த்தி ஜோடியாக சுல்தான், விஜய் ஜோடியாக வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ராஷ்மிகா மந்தனாவை தேடி வாய்ப்புகள் குவித்து வருகிறது. 

தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா:

தனுஷ் ஜோடியாக D51 படத்தில் நடிக்க உள்ளார். இரு தினங்களுக்கு முன்னர்தான் அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அது தவிர அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் 'தி கேர்ள் பிரெண்ட்' மற்றும் 'ரெயின்போ' படத்திலும், ஹிந்தியில் 'சாவா' படத்திலும் இணைய உள்ளார். பிஸியான ஷெட்யூல் போட்டு பரபரப்பாக இயங்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. 


இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய விருப்பம் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். படையப்பா, பொன்னுமணி, காதலா காதலா  உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சௌந்தர்யா. தன்னுடைய ஆர்பாட்டமில்லாத நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இருந்தார். விமான விபத்தில் உயிரிழந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

 

சௌந்தர்யாவின் பயோபிக் :

பரிதாபமாக தனது 31வது வயதில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சௌந்தர்யாவின் பயோபிக் திரைப்படம் உருவாக உள்ளது என்ற பேச்சுகள் அடிபட்டன. அந்த வகையில் நடிகை ராஷ்மிகா, சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சிறுவயது முதலே ராஷ்மிகாவின் அப்பா அவர் சௌந்தர்யாவை போலவே இருப்பதாக சொல்வாராம். அதை மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்து இருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்த தகவல் சோசியல் மீடியாவில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola