Chiyaan 62: விக்ரமுடன் இணைந்த நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா! சீயான் 62 படத்தின் கலக்கல் அப்டேட்!


நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மாமனிதன், ஆர்.ஆர்.ஆர், டான், கேப்டன் உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்துள்ள இத்தயாரிப்பு நிறுவனம் மும்பைக்கார் மற்றும் தக்ஸ் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் நடிகர் விக்ரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்து பின்னணியில் அமைந்த கதையில் காணப்பட்டார். இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க


Rajinikanth: “அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்” - ரஜினிகாந்த் உணர்ச்சிகரப் பதிவு!


தன்னை முதன்முறையாக இயக்கியுள்ள தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் உணர்ச்சிகரமான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க


Anushka Shetty : அனுஷ்காவின் 50வது படம்! வெளியான வாவ் தகவல்... கம்பேக்  படமாக அமைய ரசிகர்கள் விருப்பம்...


நடிகை அனுஷ்கா நடிக்க இருக்கும் 50வது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.மேலும் படிக்க


Lover Movie Review: காதலில் பிரச்சினை காதலர்களா, தவறான புரிதலா? மணிகண்டனின் "லவ்வர்" பட விமர்சனம்!


மணிகண்டன், கௌரிப் பிரியா,கண்ணா ரவி, நிகிலா ஷங்கர், ஹரிஷ் குமார், ஹரிணி உள்ளிட்ட குறிப்பிட்ட கேரக்டர்களை சுற்றி லவ்வர் படம் நகரும் நிலையில், அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள்.மேலும் படிக்க


S J Suryah: பெண் சிங்கமாய் வேலை செஞ்சீங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை புகழ்ந்து எஸ்.ஜே.சூர்யா பதிவு!


நடிகர் எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் தளத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.இந்த பதிவில் அவர் “உங்கள் படத்தின் பெரும் வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்களது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாதபோது நீங்கள் எப்படி செயல்பட்டீர்கள் என்பதை ஒரு முக்கியமான வி.ஐ.பி மூலமாக தெரிந்து கொண்டேன். விமாணப் பயணங்களை ஏற்பாடு செய்வது, உலகம் முழுவதும் மருத்துவர்களை சந்தித்துப் பேசுவது என ஒரு சிங்கம் போல் நீங்கள் வேலை செய்தீர்கள் என்று  நான் கேள்விப்பட்டவை எல்லாவற்றையும் இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது நினைத்துப் பார்க்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க