உறுதியாகும் விஜய் - வெற்றிமாறன் காம்போ? உற்சாகத்தில் ரசிகர்கள்!
விடுதலை படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் அடுத்தபடியாக விஜய்யுடன் வெற்றிமாறன் (Vetrimaaran) இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை கைவிட்டு அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி விஜய் தனது “தமிழக வெற்றி கழகம்” என்று தனது கட்சியின் பெயரை அறிவித்தார். தற்போது தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டுமே நடித்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
ஆஸ்கர் மேடைல பேச 10 வருஷம் முன்னாடியே ரிகர்சல் செய்தேன்: மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்யம்!
ஜெய்பீம், குட்நைட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் அடுத்து வரும் படம் லவ்வர். இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லவ்வர் படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. நடிப்பு மட்டுமில்லாமல் ஆர்.ஜே. டப்பிங் கலைஞர், உதவி இயக்குநர் என படிப்படியாக வளர்ந்து பன்முகக் கலைஞராக விளங்கும் மணிகண்டன், பீட்சா 2, விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள், அயலான் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதி கொடுத்துள்ளார். மேலும் படிக்க
விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து குட்டி ப்ரேக்: குழந்தைகளுடன் ஃபுட்பால் விளையாடி மகிழ்ந்த அஜித்!
நடிகர் அஜித் குமார் தன் மகன் உள்ளிட்ட குழந்தைகளுடன் ஃபுட் பால் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். த்ரிஷா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க, அர்ஜூன், ஆரவ், ரெஜினா காஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் படிக்க
அரசை விமர்சித்து கருத்து சொன்னாலே ஆன்டி இந்தியனா? - டென்ஷனான விஷ்ணு விஷால்
இந்தியாவில் வெறுப்புணர்வு காட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் வேதனையுடன் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் “லால் சலாம்” படம் உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர்.நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் படிக்க
அரசியல் பேசி தான் எங்க அப்பா படம் ஓடணும் இல்ல - கடுப்பான இயக்குநர் ஐஸ்வர்யா!
நேற்று லால் சலாம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “லால் சலாம் படத்தின் கதை என்னவென்று பார்த்தால் ஒரு ஊரில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டில் பிரச்சினை வெடிக்கிறது. இதனால் என்ன நடக்கிறது என்பதே காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு ரங்கசாமி தான் இந்த படத்தின் கதையை சொன்னார். ஒளிப்பதிவாளரும் லால் சலாமுக்கு அவர் தான். இப்படம் ஒரு சின்ன அரசியல் பேசுது. அது மக்கள் சார்ந்த, மக்களுக்குள் இருக்கும் அரசியலை பேசுகிறது. மேலும் படிக்க