வெறித்தனம்! ஆக்‌ஷன் விருந்து படைக்கப்போகும் சிவகார்த்திகேயன்; வீடியோ வெளியிட்ட படக்குழு


தமிழ் சினிமாவில் தற்போது எவர் க்ரீன் எண்டர்டைனராக வளம் வரும் கதாநாயகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் நடிகர் சிவக்கார்த்திகேயன். சிறப்பான கதைத் தேர்வினால் தனது சினிமா வாழ்க்கையில் கொடி கட்டிப் பறந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததால், படக்குழு அயலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பும் சில வாரங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் படிக்க


ஆதர்ச இயக்குநர் கே.வி.ஆனந்த் குடும்பத்தை சந்தித்த சூர்யா: சிவக்குமார் தந்த அன்புப் பரிசு!


அயன் படத்தின் மூலம் தனக்கு கம்பேக் கொடுத்த இயக்குநர் கே.வி. ஆனந்த் குடும்பத்தினரை, நடிகர் சூர்யா தனது அப்பாவுடன் சென்று சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்க இருக்கும் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். தொடக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வந்த படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை என்றாலும், 2009ம் ஆண்டு வெளிவந்த அயன் படம் சூர்யாவுக்கு கம்பேக் கொடுத்தது. மேலும் படிக்க


கௌதம் மேனன் படங்களின் வெற்றிக்கு காரணம் இந்த இயக்குநரா? - ரசிகர்கள் அதிர்ச்சி


பெயர் குறிப்பிடப்படாத நிலையில் கௌதம் மேனனின் நிறைய படத்துக்கு வசனம் எழுதியுள்ளேன் என இயக்குநர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.  1998 ஆம் ஆண்டு இயக்குநர் நாகராஜ் இயக்கத்தில் முரளி, சுவலட்சுமி, மணிவண்ணன், பாலாசிங், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான  படம் ‘தினந்தோறும்’. இந்த படத்திற்கு ஓவியன் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்ற இப்படத்தின் இயக்குநராக நாகராஜ் கடைசியாக 2013 ஆம் ஆண்டு மத்தாப்பூ என்ற படத்தை இயக்கினார். மேலும் படிக்க


விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.. வெற்றி கழகத்தில் இணைகிறாரா நடிகை வாணி போஜன்?


செங்களம் வெப் சீரிஸில் நடித்த போது தனது அரசியல் ஆசை இருந்ததாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் எல்லாவற்றுக்கும் ஒரு அறிக்கை மூலம் பதிலளித்தார். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை, போட்டியும் இல்லை என தெரிவித்த விஜய், 2026 சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என தெரிவித்திருந்தார். மேலும் படிக்க


இன்னும் ஒரு படம் நடிங்க.. அப்புறம் அரசியல் பண்ணலாம் - விஜய்க்கு அறிவுரை சொன்ன சீமான்!


நானும் விஜய்யும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர், இன்னும் இரண்டு படங்களுக்குப் பின் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க