SK21 update : இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் SK21 நியூ அப்டேட்!
லாவண்யா யுவராஜ் | 12 Feb 2024 12:31 PM (IST)
1
பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
2
தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக SK21 என தலைப்பிடப்பட்டுள்ளது.
3
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. பெரும்பலமான பகுதிகள் காஷ்மீரில் நடைபெற்றுள்ளது.
4
மாணவன் மற்றும் ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
5
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
6
இன்று மாலை 5 மணிக்கு SK21 படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை சிவகார்த்திகேயன் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர்.