• The Goat Life Trailer : அதிரடி அடிப்போலி.. வெளியானது ப்ரித்விராஜ் நடித்திருக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர்


மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் தி கோட் லைஃப் (The Goat Life). தேசிய விருது வென்ற ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் , மலையாளம் , இந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ப்ரித்விராஜ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் படிக்க



  • Vettaiyan: வேட்டையன் ரிலீஸ் எப்போது? - ரஜினி சொன்ன அந்த பதில்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்!


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.  கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம்  ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  இதனைத் தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் படிக்க



  • Maha Shivaratri: களைகட்டிய ஈஷா சிவராத்தி விழா.. பங்கேற்ற இந்திய சினிமா பிரபலங்கள்!


கடவுள் சிவனுக்குரிய முக்கிய வழிபாடு நாட்களில் சிவராத்திரியும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி திதி சிவராத்திரியாக கொண்டாடப்பட்டாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. இது மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சிவ பக்தர்கள் முதல் நாளில் ஒருபொழுது உணவருந்தி இரவு கண் விழித்து நான்கு கால பூஜைகளில் பங்கேற்று மறுநாள் காலை நீராடி உணவருந்தி விரதத்தை நிறைவு செய்வார்கள். மேலும் படிக்க



  • Kavin: அடுத்த சிம்புவாக மாறுகிறாரா கவின்? ஷூட்டிங்குக்கு நேரத்துக்கு வருவதில்லை எனக் கிளம்பிய குற்றச்சாட்டு!


சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணிப்பவர்கள் ஏராளம். ஆனால் அப்படி பயணித்தவர்கள் அனைவரும் ஸ்டார் நட்சத்திரங்காளாக ஜொலிப்பார்களா என்றால் அது சந்தேகம் தான். அந்த வகையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். மேலும் படிக்க



  • Indian 2: ரூ.30 கோடி செலவில் இந்தியன் 2 படப் பாடல்.. கமல்ஹாசனுக்காக காசை வாரி இறைக்கும் ஷங்கர்?


2024ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் ஷங்கர் இயக்கும்  இந்தியன் 2. இப்படியான நிலையில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.  இந்தியன் 2 படத்தை வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் , ரகுல் ப்ரீத், காஜல் அகர்வால், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா , பாபி சிம்ஹா  உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளார்கள். மேலும் படிக்க