மக்களவைத் தேர்தலில் ஏன் ஓட்டுப்போடவில்லை? நடிகை ஜோதிகா சொன்ன காரணம்!


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்.19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நடிகை ஜோதிகா வாக்கு செலுத்த வராதது திரைத்துறை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், நடிகை ஜோதிகா தான் வாக்களிக்காதது பற்றி தற்போது பேசியுள்ளார். தான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பேன் என்றும் ஆனால் சில நேரங்களில் வேலை காரணமாக வெளியூர்களில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது, உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்றும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.


அரண்மனை 4! ரசிகர்களை பயமுறுத்தியதா? வெறுப்பேற்றியதா? முழு திரை விமர்சனம் இதோ!


சுந்தர்.சி இயக்கத்தில் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. வீட்டை விட்டு ஓடிச்சென்று காதல் திருமணம் செய்து கொண்ட தன் தங்கை தமன்னாவின் இறப்பை அடுத்து அந்த ஊருக்குச் செல்லும் சுந்தர். சி கண்டறியும் மர்ம முடிச்சுகள், பேயிடம் இருந்து தனது தங்கை மகளை காப்பாற்ற அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இவற்றை அமானுஷ்யம் கலந்து கொடுத்துள்ளது இப்படம்.


மனோபாலா மறைவிற்கு பிறகு ரிலீசான அவரது படங்கள் இத்தனையா? லிஸ்ட்டை பாருங்க!


சென்ற ஆண்டு இதே நாளில் இந்த மண்ணை விட்டு மறைந்து தன் ரசிகர்களைக் கலங்கடித்து அவர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர் நடிகர், இயக்குநர் மனோபாலா. அவரது முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திரை உலகினரும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் மறைந்த ஓராண்டுக்குள், அவரது டஜன் கணக்கான படங்கள் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை ஒருபுறம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


உத்தமவில்லன் படத்தால் சிக்கலில் கமல்ஹாசன்.. திட்டமிட்டபடி வெளியாகுமா இந்தியன் 2?


உத்தம வில்லன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்து, ஒரு படம் நடித்துத் தருவதாகக் கூறி, பின்னர் கமல்ஹாசன் அப்படத்தை செய்து தரவில்லை என இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளது. 


பிச்சைக்காரனாக நடிக்கும் தனுஷூக்கு வில்லன்.. நாகார்ஜூனாவின் குபேரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!


சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பான் இந்தியப் படமாக உருவாகி வரும் படம் குபேரா. இப்படத்தின் மூலம் முதன்முறையாக பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா முதன்முறையாக நடிகர் தனுஷ் உடன் இணைந்துள்ள நிலையில், இப்படத்தில் அவரது ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 12: "நேரில் நின்று பேசும் தெய்வம்" தாயைப் போற்றி வணங்கும் மகனின் பாசம்!


நிகழ்ச்சிக்கு வராத பிரபு தேவா! திடீரென மயங்கி விழுந்த குழந்தைகள் - அதிர்ச்சியில் பெற்றோர்! நடந்தது என்ன?