கொரோனாவின் பிடியிலிருந்து சற்று வெளியே வந்த உலகத்தை தற்போது மீண்டும் கொரோனா சிறையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. பல வாரங்களுக்கு பிறகு இந்தியாவில் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியிருப்பது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா சற்று ஓய்ந்ததை அடுத்து மக்கள் அலட்சியமாக நடந்துகொண்டதே இந்த விபரீதத்துக்கு காரணமென பலர் கூறிவருகின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கு கொரோனாவின் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா உள்ளிட்டோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது.
Kareena Kapoor: கொரோனா பாதிக்கப்பட்ட கரீனா கபூர்.. வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்.. காரணம் என்ன?
தமிழ்நாட்டிலும் வைகை புயல் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதியானது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கம்போஸிங்கிற்காக லண்டன் சென்றுவந்ததே இதற்கான காரணம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், ஹிந்தி நடிகரும், தயாரிப்பாளர் போனிகபூரின் மகனுமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன் கபூருக்கு மட்டுமின்றி அவரது உறவினரும், தயாரிப்பாளருமான ரியா கபூர் மற்றும் ரியா கபூரின் கணவரான கரண் பூலானி ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் அர்ஜுன் கபூர் ஒரு ஹோட்டலிலும், ரியா கபூர் மற்றும் கரண் பூலானி ஆகியோர் தங்களது வீடுகளிலும் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதற்கிடையே தயாரிப்பாளர் போனி கபூருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
முன்னதாக நேற்று ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 681ஆக இந்தியாவில் இர்நுத சூழலில் இன்று அது 981ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch Video: சும்மா இருந்தவர்களை நகைக் கடன் வாங்கக் கூறிய உதயநிதி; இன்று அதையே முறைகேடு என்றால் எப்படி?
நான்கு முறை தடுப்பூசி போட்ட பெண்ணுக்கு கொரோனா? - ம.பி.யில் குழப்பம்