தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான்(Omicron) வைரஸானது தற்போது 100க்கும்மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 


இதனையடுத்து ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே  அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையும் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 45 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது.




இதற்கிடையே ஒமிக்ரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 781ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 961ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 263 பேரும், மகாராஷ்டிராவில் 252 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 






அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒரே நாளில் 13,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  பல வாரங்களுக்கு பிறகு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10,000ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.




தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் மாநில அரசுகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Today Headlines: பிரதமருக்கு முதல்வர் கடிதம்... மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அங்கீகாரம்... ஜார்க்கண்ட் பெட்ரோல்... இன்னும் பல!


‛கொரோனா பாதித்த மாநிலம் உபி...’ - கொரோனா மாநிலமாக அறிவித்தார் ஆதித்யநாத்!


'கொரோனா வைரஸ் எல்லாம் இல்லை; கங்காசாகர் மேளாவிற்கு பக்தர்கள் வருவார்கள்': கபில் முனி கோயில் தலைமை பூசாரி