திமுகவின் தேர்தல் அறிக்கையில் மூலவராக பார்க்கப்பட்ட வாக்குறுதி, ‛விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி’ என்கிற  அறிவிப்பு. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக முன்வைக்க வாக்குறுதி அது. நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அது தொடர்ந்தது. தஞ்சாவூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் நீலமேகம் ஆகியோரை ஆதரித்து தஞ்சை வல்லத்தில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், பேசிய பேச்சும், வாக்குறுதியும் இதோ...


‛‛ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என வாக்குறுதி அளித்த மோடி, உங்கள் வங்கி கணக்கில் அந்த தொகையை போட்டாரா? ஒன்னே ஒன்னு தான் போட்டாரு; எல்லாருக்கும் நாமம் தான் போட்டாரு! இப்போ நமக்கு அந்த வாய்ப்பு இருக்கு... அதே நாமத்தை, நாம அவருக்கு போடணும். 5 சவரன்.. கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கினால், கடன் தள்ளுபடி. நாளைக்கே போய் வாங்கிடுங்க. வரப்போவது நம்ம ஆட்சி; நம்ம தலைவர் தள்ளுபடி செய்திருவாரு. நான் வாஸ்தவமா தானே பேசுறேன்? திமுக தேர்தல் அறிக்கை தான் ஹீரோ! ஹீரோ இருந்தால் ஒரு வில்லன் இருப்பார். அந்த வில்லன் தான் மோடி. வில்லனை விரட்ட வேண்டாமா? உதயசூரியன் சின்னத்தின் நாம் போடும் ஒவ்வொரு ஓட்டும், மோடியின் தவறுகளுக்கு நாம் வைக்கும் குட்டு!’’






இவ்வாறு உதயநிதி அந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார். சட்டமன்ற தேர்தலிலும் இது போன்ற பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார். இந்நிலையில் தான், பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பில், கண்டிஷன் அப்ளை பார்மட்டில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தள்ளுபடி என்று நேற்று அரசு அறிவித்தது. இது கடும் அதிருப்தியை மக்களிடம் ஏற்படுத்திய நிலையில், இன்று காலை புதிய அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார். அதில் 50 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளார். ஆக, பாதிக்கு பாதி பேருக்கு தான் நகைக்கடன் தள்ளுபடி செய்யப் போகிறார்கள். எஞ்சியிருக்கும் 50 சதவீதம் பேரின் நிலை என்ன? சும்மா இருந்த எங்களை நீங்கள் தானே போய், நகைக்கடன் வாங்க கூறினீர்கள்? இன்று, நகைக்கடன் பெற்றதில் முறைகேடு இருப்பதாக முதல்வர் கூறுகிறார்; இரண்டிற்கும் யார் காரணம்? என பல்வேறு கேள்விகளை பொதுமக்களும், எதிர்கட்சிகளும் தற்போது முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். 






பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பான கேள்வியை உதயநிதிக்கு எழுப்பியுள்ளார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண