தமிழில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் யூ டியூப்பில் ரிவியூ செய்து ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் அடிக்கடி சர்ச்சைக்கு ஆளாகி வருபவர் ப்ளூசட்டை மாறன். இந்த நிலையில், ஏப்ரல் 1-ந் தேதியான இன்று இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.






அந்த பதிவில், இனி நடிகர்களின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் தான் படம் மூன்று நாட்களுக்கு மேல் ஓடினால் கூடுதல் தொகையை அனைத்தும் திரையரங்குக்கு வரும் ரசிகர்களிடமிருந்து நேரே பெற்றுக்கொள்ளலாம்.. !!கதையை மட்டுமே நம்பும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் சங்கம் அதிரடி!!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


அவரது பதிவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் அவருக்கு வித்தியாசமாக பதிலளித்து வருகின்றனர்.






ஈரோடு மகேஷ் என்ற டுவிட்டர்வாசி, “ இனிமேல் ஆண்டி இந்தியன் படம் போன்று எடுக்கும் டைரக்டர்கள் ப்ரொடியூசருக்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக திருப்பித்திர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். சிலர் ப்ளூசட்டை மாறன் கருத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


ப்ளூசட்டை மாறன் தனது யூ டியூப் பக்கம் மூலமாக தமிழில் வெளியாகும் அனைத்து திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட்டில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார். சமீபகாலமாக திரையில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் அவர் மிகவும் கடுமையாகவும், மோசமாகவும் விமர்சித்து வருவதால் அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


குறிப்பாக, சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் பற்றி மிகவும் கடுமையாக அவர் உருவகேலி செய்தது ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக, திரைத்துறையினர் பலரும் ப்ளூசட்டை மாறனுக்கு மிகவும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ப்ளூசட்டை மாறன் ஆண்டி இந்தியன் என்ற ஒரு படத்தை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Maruthanayakam: நீண்ட நாள் கனவு... விரைவில் நிஜம்...மருதநாயகம் படத்தை மீண்டும் கையில் எடுக்கும் கமல்!?


மேலும் படிக்க : கர்ப்ப காலத்தில் தலைகீழாக யோகா; ஷாக்கான ரசிகர்கள்.. விளக்கமளித்த சீரியல் ஸ்டார்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண