சென்னை கொடுங்கையூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி வந்து சிலரிடம் போதை மாத்திரைகளை வாங்கி செல்வதாக  கொடுங்கையூர் போலீசாருக்கு தேசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் ஜவகர் நகர் பகுதியில் போதை மாத்திரை கை மாற்றப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த இடத்தில் போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் நின்றிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கொளத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சூர்யா 25 என்பதும் அவரிடம் நைட்ரேவிட் எனப்படும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 



 

 

இதனை அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்த போது வலி நிவாரண மாத்திரைகளை அவர் யாரிடம் வாங்கினார் என்பது குறித்து விசாரணை செய்த போது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவெற்றியூர் சாதுமா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு 35 என்பவரிடமிருந்து அவர் மாத்திரைகளை வாங்கியது தெரிய வந்தது. மேலும் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஜாபர் 29 என்ற நபர் மூலம் இவர்கள் மாத்திரைகளை விற்று வந்தது தெரிய வந்தது இதனையடுத்து பிரபு ஜாபர் ஆகிய 2 பேரையும் கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் பிரபு கடந்த 15 வருடங்களாக சென்னையில் உள்ள பிரபலமான மருந்தகங்களில் பணிபுரிந்து வந்துள்ளார் அவர் மூலமாக வலி நிவாரண மாத்திரைகளை ஆர்டர் செய்து அதனை சூர்யா வாங்கி வந்துள்ளார்.சூர்யாவிடம் இருந்து அந்த மாத்திரைகளை ஜாபர் மூலம் பல கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இவர்களிடமிருந்து 582 நைட்ரேவிட் மற்றும் டேட்டால் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 



 

 

வியாசர்பாடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்

 



 

சென்னையில் கஞ்சா விற்பவர்களை கூண்டோடு களை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்திருந்தார்.  அதன் பேரில் தினமும் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். வியாசர்பாடி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. முல்லை நகர் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் 20 என்ற நபரை கைது செய்தனர். இதே போன்று எம்.கே.பி நகர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வியாசர் பாடி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் 32 மற்றும் வியாசர்பாடி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த மயில் 34 ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து எம்.கே.பி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.