Maruthanayakam: நீண்ட நாள் கனவு... விரைவில் நிஜம்...மருதநாயகம் படத்தை மீண்டும் கையில் எடுக்கும் கமல்!?

கமல்ஹாசன் மீண்டும் மருதநாயகம் படத்தை கையில் எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திரைப்படம் மருதநாயகம். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தனது லட்சிய திரைப்படம் என பல மேடைகளில் கூறியிருக்கிறார். இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் கமலே இந்த படத்தை தயாரித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான படத்தின் போஸ்டர்கள் இப்போதும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தை எப்போது பார்க்கலாம் என்று நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் உள்பட இந்தியாவே எதிர்ப்பார்த்து காத்திருகிறது. 

Continues below advertisement

இந்தநிலையில், கமல்ஹாசன் மீண்டும் மருதநாயகம் படத்தை கையில் எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் நாயகனாக கமல் நடிக்கவில்லை என்றும், வேறொரு நடிகரை கொண்டு படத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. 

இந்த படத்தை முழுக்க முழுக்க கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாகவும், இதற்காக கமல் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் பரவி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola