பிரபல சீரியல் நடிகை டெபினா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தலைகீழாக போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்ப்பமாக இருக்கும் பிரபலங்கள் தற்போது, கர்ப்ப கால நேரத்தில் தாங்கள் செய்யும் அன்றாட நிகழ்வுகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும். எந்த மாதிரியான உணவுகளை, உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பதற்கு இவர்களின் வீடியோக்கள், புகைப்படங்கள் சில நேரங்களில் உதவியாக இருக்கிறது. மேலும், இதன்மூலம் தங்களின் ரசிகர்களுடனும் அவர்கள் கனக்ட்விட்டியாகவும் இருக்கின்றனர்.
இந்த நிலையில். சீரியல் நடிகை ஒருவர் கர்ப்பகாலத்தில் யோகா போஸ் கொடுத்துள்ளார். பிரபல சீரியல் நடிகை டெபினா. இவர், ‘ராமாயன்’ தொடரின் மூலம் புகழ்பெற்றவர். அந்தத் தொடரில் ராமனாக நடித்த குர்மித் என்பவரை காதலித்து கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 12 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாகியுள்ள டெபினா, தனது கணவருடன் கர்ப்பகால வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். கர்ப்பக் காலத்தில் டாக்டரின் அறிவுரையினபடி, யோகா சனங்கள், உடற்பயிற்சியை போன்றவற்றை தன்னுடைய கணவரின் உதவியுடன் அவர் செய்து வருகிறார்.
தற்போது, உடற்பயிற்சியின் போது டெபினா தலைகீழாக நின்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் அவரை இந்த நேரத்தில் நல்ல படியாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்