Japan Movie Karthi: ஜப்பான் படத்தில் நடித்திருக்கும் கார்த்தியை நடித்தது குறித்து புளூசட்டை மாறன் விமர்சித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிதாக திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் புளூசட்டை மாறன். ஆரம்பத்தில் இவரது விமர்சனங்களுக்கு வரவேற்பு இருந்தன. திரைப்படங்கள் அதன் மேக்கிங் உள்ளிட்டவற்றை விமர்சனம் செய்த புளூசட்டை மாறன், ஒரு கட்டத்தில் நடிகர்களை உருவக்கேலி செய்ய தொடங்கினார். தனக்கு பிடிக்கவில்லை என்றால் எந்த ஹீரோ நடித்த படமாக இருந்தாலும் அதை கிண்டல் செய்து விமர்சனம் கூறும் புளூ சட்டை மாறன் சர்ச்சைகளிலும் சிக்கினார்.
அந்த வகையில், வலிமை படத்தில் நடித்த அஜித்தை உருவ கேலி செய்த சர்ச்சையானார். அதோடு நிறுத்தி கொள்ளாமல், கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்த ஜாஃபரையும் புளூசட்டை மாறன் உருவ கேலி செய்தார். இதனால், புளூசட்டை மாறனுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்துள்ளன. இந்த நிலையில் ஜப்பான் படத்தில் நடித்த கார்த்தியை புளூசட்டை மாறன் விமர்சித்து டிரோல் செய்துள்ளார்.
புளூசட்டை மாறன் வெளியிட்ட டிவிட்டர் பக்கத்தில், “JPN விரிவாக்கம் ஜப்பான் என்ற நாடு. இதை நீங்கள் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் பார்த்திருக்கலாம். தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் JPN ஜாதி பற்று நடிகர்”
என்று குறிப்பிட்டிருக்கிரார்.
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படமான ஜப்பான் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். அதில் கார்த்தி ஜப்பான் என்ற பெயரில் நடித்துள்ளார். அவரை கேரக்டரான ஜப்பான் என்பதை ஜாதி பற்று நடிகர் என மறைமுகமாக கார்த்தியை விமர்சித்து கமெண்ட் செய்துள்ளார். இது தற்போது டிவிட்டரில் வைரலகை வருகிறது.
நடிகர் கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையோடு ‘ஜப்பான் (Japan)’ படம் வெளியாகியுள்ளது . ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அனு இம்மானுவேல், சுனில் வர்மா, வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், ஜித்தன் ரமேஷ், பவா செல்லதுரை, விஜய் மில்டன் என பலரும் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜப்பான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க: Deepavali 2023: தீபாவளி தல தீபாவளி.. அசோக் செல்வன் முதல் அமலா பால் வரை.. தல தீபாவளி கொண்டாடும் செலிபிரிட்டிஸ்!