கடந்த அக்டோபர் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கியது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி, அன்னபாரதி வெளியேற உடல் நிலை ஒத்துவராத காரணத்தால் பவா செல்லதுரை வெளியேற கடந்த வாரம் சக போட்டியாளர்கள் குற்றம்சாட்டியதன் அடிப்படையில் ரெட் கார்டு வழங்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார்.


 




வைல்ட் கார்டு போட்டியாளர்கள் :

மேலும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக ஐந்து பேர் அதிரடியாக உள்ளே என்ட்ரி கொடுக்க ஏற்கனவே இருந்த போட்டியாளர்கள் ஆட்டம் கண்டனர். முதல் நாளே வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த அனைவரும் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட எதற்கு எடுத்தாலும் சண்டை வெடித்தது. கன்டென்ட் என்ற பெயரில் மாயா குழுவும் அர்ச்சனா குழுவும் மாறி மாறி போட்ட சண்டைகள் அனைத்தும் இரைச்சலாகவே இருந்தது.

இந்த வார எவிக்‌ஷன் :

இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் ஷூட்டிங் இன்று துவங்கியது. 42வது நாளான இன்று இந்த வார எவிக்‌ஷன் ப்ராசஸின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார் என்ற ஆதங்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. பூர்ணிமா அல்லது ஐஷு வெளியேற்ற படலம் என பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

சர்ச்சையில் சிக்கிய ஐஷு :

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்த நடன இயக்குனர் அமீரின் வளர்ப்பு குடும்பத்தை சேர்ந்தவர் தான் ஐஷு. இவரும் சிறந்த நடன கலைஞராக இருந்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த ஐஷு ஆரம்பத்தில் நன்றாக விளையாடி வந்தார். போகப்போக கேட்பாரின் பேச்சை கேட்டு சில சர்ச்சைகளில் சிக்கினார்.


 




ஐஷு - நிக்சன் விவகாரம் :

சக போட்டியாளரான நிக்சன் உடன் ஐஷு பழகி வந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக கண்ணாடி வழியே முத்தங்களை பரிமாறிய கன்டென்ட் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தங்களுடைய குடும்ப மானத்தை வாங்கி வரும் ஐஷுவை வெளியே அனுப்பி விடுங்கள் என ஐஷுவின் பெற்றோர்  பிக் பாஸ் செட்டுக்கே சென்று கொந்தளித்தார்கள். அந்த தகவல் இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது.

இப்படியாகப்பட்ட நிலையில் இன்றைய எவிக்‌ஷன் ப்ராசஸின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்றதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் ஐஷு என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. 
   
ஐஷுவின் எலிமினேஷனுக்கான காரணம் வழக்கமான வாக்குகளின் அடிப்படையில் நடைபெற்றதா இல்லை பெற்றோர்களின் கெடுபிடியால் நடந்ததா என பல கேள்விகள் எழுந்து வருகின்றன.