தீபாவளி என்றாலே ஸ்பெஷல் தான். அதிலும் தல தீபாவளி என்றால் அது மிக மிக ஸ்பெஷல் மொமெண்ட் தானே... அப்படி நம்ம திரையுலகத்தைச் சேர்ந்த செலிபிரிட்டிகள் யார் யாரெல்லாம் தல தீபாவளி கொண்டாடுறாங்க பார்க்கலாம் வாங்க...


கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் :


தேவராட்டம் திரைப்படத்தின் மூலம் இணைந்து நடித்த கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவருக்கும் இடையே காதல் பத்திக் கொள்ள, இவர்கள் இருவரும் பல இடங்களில் டேட்டிங் செய்து வந்தார்கள். பெற்றோரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக கடந்த நவம்பர் 28ம் தேதி சென்னையில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


 



ஹன்சிகா மோத்வானி - சோஹேல் கதுரியா :


வியக்க வைக்கும் வகையில் 450 ஆண்டுகால பழமையான அரண்மனையில் படுஜோராக கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஹன்சிகா மோத்வானி - சோஹேல் கதுரியா திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடி இந்த ஆண்டு தல தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.


ஹரீஷ் கல்யாண் - நர்மதா:


தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஹரீஷ் கல்யாண் தனது நீண்டநாள் தோழியான நர்மதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 28ம் தேதி திருமணம் சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. 


 



கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா :


பாலிவுட் நடிகர்கள் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 7ம் தேதி ராஜஸ்தானில் பிரமாண்டமான வரவேற்புடன் திருமணம் செய்து கொண்டனர். பல திரைப் பிரபலங்களும் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டனர். 


கவின் - மோனிகா :


சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வெற்றி பெற்று இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் கவின். இவர் தனது நீண்ட நான் காதலியான மோனிகாவை கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். 


பரினீதி சோப்ரா - ராகவ் சத்தா :


பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா தனது காதலரும் ஆம் ஆத்மி எம்பியுமான ராகவ் சத்தாவை கடந்த செப்டம்பர் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்ற அவர்களின் திருமண விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.


 



அசோக் செல்வன்  -  கீர்த்தி பாண்டியன் :


இளவட்ட பெண்களின் ரோமியோவாக இருந்து வரும் அசோக் செல்வனுக்கும் நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதி இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாட போகிறார்கள். 


அமலா பால் - ஜகத் தேசாய்:


மைனா படம் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை அமலா பால் தனது நண்பர் ஜகத் தேசாய் என்பவரை நவம்பர் 6ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.


வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி :


டோலிவுட் முன்னணி நடிகரான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவரும் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இத்தாலியில் இருவருக்கும் கோலகமாக நவம்பர் 1ம் திருமணம் நடைபெற்றது.  


இந்த தல தீபாவளி கப்பிள்களுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.