மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியாகும் திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, யோகி பாபு, மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


வரும் ஜூலை 14ஆம் தேதி இப்படம் வெளியாகும் நிலையில் முன்னதாக மாவீரன் படம் பற்றி இணைய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்த மீம் ஒன்று பேசுபொருளானது. 


மாவீரன் பட வெளியீட்டுக்கு இரண்டு நாள்களுக்கு முன் ஜூலை 12ஆம் தேதி டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபள் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த இரண்டு படங்களையும் குறிப்பிட்டு குறுக்க இந்த கெளசிக் வந்தா” என்கிற டெம்ப்ளேட்டை  ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்திருந்தார்.


இந்த மீம் விவகாரம் படக்குழுவை அப்செட் பண்ணிய நிலையில், மாவீரன் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா ப்ளூ சட்டை மாறனுக்கு கொடுத்த பதிலடி மேலும் பரபரப்பைக் கிளப்பியது.  “வணக்கம் சார். நான் அருண் விஸ்வா . மாவீரன் படத்தோட தயாரிப்பாளர். எனக்கு என் படம்தான் மிஷன் இம்பாசிபள், அவதார், ஆர்.ஆர்.ஆர் எல்லாமே. 


உங்க வயசுக்கு நீங்க இந் மீம் ஷேர் செய்திருக்க வேண்டாம் “ என  அருண் விஸ்வா பதில் ட்வீட் பதிவிட்டது பரபரப்பைக் கிளப்பியது. இது கோலிவுட் வட்டாரத்திலும் இணையவாசிகள் மத்தியிலும் பேசுபொருளான நிலையில், வாயைக் கொடுத்து ப்ளூ சட்டை மாறன் வாங்கிக்கட்டிக் கொண்டதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.


தற்போது கவலையுடன் ப்ளூ சட்டை மாறன் இதற்கு பதில் ட்வீட் பகிர்ந்துள்ளார். “சாதாரண மீம் போடக்கூட கருத்து சுதந்திரம் இல்லையா?” என ப்ளூசட்டை மாறன் பதிவிட்டுள்ளார். 


 






மேலும்,  கமெண்ட் செக்‌ஷனில் ”ஒரு வாரம் அல்லது ஒரு ரெண்டு நாள் கழிச்சு விமர்சனம் எல்லாம் போடுங்க” என இணையவாசிகள் கருத்துகளைத் தெரிவித்து  வருகிறார்கள். ஆனால், “ஹோட்டல்ல சோறு நல்லா இல்லனா மூணு நாள் கழிச்சி கேள்வி கேப்பீங்களா?” எனவும் விதண்டாவாதமாகப் பேசி வருகிறார் ப்ளூசட்டை மாறன். 


மேலும் உங்கள் படத்தைப் பற்றி பேசிக்கொள்ளுங்கள் எனும் கமெண்டுக்கும், வேணும்னா என்னை கலாய்ச்சி நீயும் போடு என்றும் இணையவாசிகளிடம் வாதிட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.


மேலும் படிக்க: Bumper Review: பணத்தால் சோதனை செய்யப்படும் மனிதர்களின் அறம்.. பாராட்டைப் பெற்ற பம்பர் திரைப்படம்.. முழு விமர்சனம்..!