ஒரு பார்வையாளர்களுக்கு ஒரு ரூபாய் என்று கொடுத்தால் தான் நேர்காணல்களுக்கு சம்மதிப்பதாக பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார். 


பிக்பாஸ் சீசன் 7


கடந்த ஆக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்ட விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நேற்றுடன் முடிவடைகிறது. நேற்றைய தினம் மிகப்பிரமாண்டமான இறுதிப்போட்டி நடைபெற்றது.  மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.


காத்திருக்கும் யூடியூப் சானல்கள்


அதே நேரம் மறுபக்கத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்ததும் போட்டியாளர்களை வரிசையாக பேட்டி எடுக்க  காத்திருக்கிறார்கள் யூடியூபர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த சில வாரங்கள் முழுவதும் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த வெளியே பெரிதும் தெரியாது தகவல்கள் வெளிவரும் என பார்வையாளர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.  பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மட்டுமில்லை ஏற்கனவே வெளியே சென்ற போட்டியாளர்கள் என அனைவரும் இந்த பட்டியலில் அடக்கம். 


பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியப் பின்னும் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவரான நடிகர் பிரதீப் ஆண்டனி தனது ட்விட்டர் பதிவில் தன்னிடம் எக்கச்சக்கமான யூடியூப் சானல்கள் பேட்டி எடுக்க அனுமதி கேட்பதாகவும் அதற்காக பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார். 






மேலும் எப்படியும் இந்த சானல்கள் எல்லாம் விளம்பரத்திற்காக தன்னை விற்கதான் போகிறார்கள். அதனால் தான் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டிக்கும் ஒரு வியூக்கு ஒரு ரூபாய் வீதம் தனக்கு பணம் கொடுத்தால் தான் பேட்டி அளிப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவுடன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஒரு பகுதியையும் அவர் பகிர்ந்து ‘சொல்வதெல்லாம் உணமையில வரவேண்டியவன் டா நான்’ என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.




மேலும் படிக்க : Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் ஷோ! டைட்டிலை தட்டித் தூக்கப்போவது யார்? உடனுக்குடன் அப்டேட்ஸ்!


BigBoss 7 Winner: பிக்பாஸ் 7 வெற்றியாளரின் பரிசுத்தொகை இவ்வளவா? கை நிறைய அள்ளிச் செல்லப்போவது யார்?