Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வென்றார் அர்ச்சனா.. ரன்னர் மணிசந்திரா

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Updates: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் ஷோவின் கிராண்ட் பைனல் அப்டேட்ஸை இங்கே காணலாம்.

ABP NADU Last Updated: 14 Jan 2024 11:08 PM
Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: டைட்டில் வென்ற அர்ச்சனா.. ரன்னர் ஆன இடம்பிடித்த மணிசந்திரா

பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றார். அவருக்கு பிபி 7 கோப்பையும் 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை மணி சந்திரா பிடித்தார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: என் மகளை அனுப்ப எனக்கு விருப்பமில்ல... பிக்பாஸ் ஃபைனலில் அர்ச்சனாவின் தந்தை

பிக்பாஸ் ஃபைனலில் பேசிய போட்டியாளர் அர்ச்சனாவின் தந்தை, இந்த நிகழ்ச்சிக்கு தனது மகளை அனுப்புவதற்கு விருப்பம் இல்லை என்றும் வெளியே வரும்போது நிச்சயமான அர்ச்சனா தன் பெயரைக் கெடுத்துக் கொள்வார் என்று நம்பியதாக கூறினார். ஆனால் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து கமல்ஹாசன் அவருக்கு கொடுத்த அறிவுரைகளுக்கு கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் வீட்டிலிருந்து மூன்றாவதாக வெளியேறினார் மாயா கிருஷ்ணன்

விஷ்ணு , தினேஷைத் தொடர்ந்து மூன்றாவதாக மாயா கிருஷ்ணன்   பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: இறுதி மேடையில் மாயா, அர்ச்சனா, மணி!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இறுதி மேடைக்கு வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனுடன் உரையாடி வருகின்றனர்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸில் நான் செய்த சாதனை இதுதான்..மனம் பகிர்ந்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக தான் பரிந்துரைத்த புத்தகங்களை நிறைய மக்கள் வாங்கிப் படிப்பதாகவும் அதுவே தான் செய்த மிகப்பெரிய சாதனையாக தான் கருதுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் 8க்கு காத்திருப்பேன்.. விடைபெற்ற பிக்பாஸ்!

பிக்பாஸ் ஃபைனலிஸ்ட்டுகளிடமிருந்து விடைபெறுவதாகக் கூறிய பிக்பாஸ், நானும் என் இனிய தனிமையும் இனி பிக்பாஸ் 8க்காக காத்திருப்போம் என்று ஜாலியாகப் பேசி மாயா, அர்ச்சனா, மணி ஆகியோரை வழி அனுப்பி வைத்தார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: சமூக வலைதளங்களில் வரம்பு மீறிய விமர்சனங்கள்.. குட்டு வைத்த பிக்பாஸ்!

“சமூக வலைதளங்களில் இன்று உலா வரும் வரம்பு மீறிய விமர்சனங்களைக் கடந்தும் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள்” என மாயா, அர்ச்சனா, மணி ஆகிய இறுதி போட்டியாளர்களுடன் பிக்பாஸ் உரையாடினார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: நிறைய அசைகளுடன் உள்ளே வந்தேன்...இரண்டாவதாக வெளியேறினார் தினேஷ்

பிக்பாஸ் டைட்டில் ரேஸில் இருந்து இரண்டாவதாக வெளியேறிய தினேஷ் கமல்ஹாசனிடம் பேசினார் “ நிறைய ஆசை, கனவுகளுடன் வந்தேன். வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தேன். கண்டிப்பாக கடுமையாக போட்டி போட்டுள்ளேன். ஒவ்வொரு வாரமும் இவர்கள் கொடுத்த அன்புக்கு ரொம்ப நன்றி” என அவர் கூறினார்

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: ஷோ முடியும்போது ட்விஸ்ட் தந்த பிக்பாஸ்.. 3 ஃபைனலிஸ்ட்டுகளுக்கு டாஸ்க்!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மூன்று போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் இறுதியாக ஒரு டாஸ்க் தந்துள்ளார். வின்னர் டிராஃபியுடன் போட்டியாளர்களை உரையாடும்படி சுவாரஸ்யமான டாஸ்க் கொடுத்துள்ள நிலையில் அர்ச்சனா, மாயா, மணி மூவரும் உணர்வுப்பூர்வமாக பேசினர்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: அடுத்த எலிமினேஷன்.. வெளியேறிய தினேஷ்!

பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது ஆளாக தினேஷ் வெளியேறினார். இன்னும் மாயா, அர்ச்சனா, மணி ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: ரவீனா, மாயாவுக்கு என்ன விருது?

எனர்ஜிடிக் போட்டியாளர் விருது வென்ற ரவீனா பிக்பாஸ் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மாயாவுக்கு பன்முகத் திறமையாளர் விருது வழங்கப்பட்டது.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: ரைஸிங் ஸ்டார் அர்ச்சனா.. இன்ஸ்பிரேஷன் விருது வென்ற விசித்ரா!

ரைஸிங் ஸ்டார் விருதினை அர்ச்சனாவுக்கும், விசித்ராவுக்கு இன்ஸ்பிரேஷன் விருதும், பூர்ணிமாவுக்கு உறுதியான போட்டியாளர் விருதையும் கமல்ஹாசன் வழங்கினார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: கேம் சேஞ்சர் விருது வென்ற தினேஷ்.. செல்ஃப் மேட் விருது வென்ற நிக்சன்!

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சிறப்பு அவார்டுகளை பிக்பாஸ் குழுவினர் தேர்ந்தெடுத்து வழங்கினர். இதில் கேம் சேஞ்சர் எனும் விருதினை தினேஷூம், செல்ஃப் மேட் போட்டியாளர் எனும் விருதினை நிக்சனும் பெற்றனர்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் ஃபைனலில் முதல் எலிமினேஷன்.. வெளியேறிய விஷ்ணு!

பிக்பாஸ் ஃபைனலிஸ்டுகளில் இருந்து முதலாவதாக விஷ்ணு வெளியேறியுள்ளார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் மேடையில் கமல் பட இயக்குநர்கள் அன்பறிவு

கமல்ஹாசனின் 237ஆவது படத்தை இயக்கும் அன்பறிவு மாஸ்டர்கள் பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசன் பற்றியும் அவரை இயக்கும் வாய்ப்பு பற்றியும் பேசினார்கள்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: என்னுடைய ரசிகனாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால்... கமல் சொன்ன பதில்!

ஒரு ரசிகன் எப்படியானவனாக இருக்க வேண்டும் என்று விக்ரமின் கேள்விக்கு “நான் சினிமாவின் ரசிகன், நீங்கள் என்னுடைய ரசிகனாக இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் நல்ல சினிமாவின் ரசிகனாக இருக்க வேண்டும்” என்று கமல் பதில் கூறினார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: அடுத்த தலைமுறைக்கு அன்பை கொண்டு சேர்க்க வேண்டும்.. ஜோவிகாவுக்கு பதில் சொன்ன கமல்!

அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய விஷயம் என்ன என்ற ஜோவிகாவின் கேள்விக்கு “அடுத்த தலைமுறைக்கு அன்பைக் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று கமல் பதிலளித்தது ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றது.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: ”இப்போ ரொம்ப தைரியமா இருக்கேன்’ - அர்ச்சனா

பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன் தான் அதிகம் பயப்பட்டதாகவும் தற்போது தான் தைரியமாக பேச பழகிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: இது எல்லாம் என்னால பண்ண முடியுமா.. பிக்பாஸ் வீட்டில் மாயா செய்த சாதனை!

இதுவரை பார்வையாளர்களுடன் இருந்த கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன் கலந்து பேசினார். அப்போது மாயா கிருஷ்ணன் “பிக்பாஸ் வீட்டில் வந்தபிறகு தான் நிறைய மனிதர்களின் நம்பிக்கையை மற்றும் நிறைய நண்பர்களை சம்பாதித்திருக்கிறேன்“ என்று கமலிடம் கூறினார்.

Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி தந்த கமல்!

பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் நாளுக்குப் பிறகு 105ஆவது நாளான இன்று எண்ட்ரி தந்த கமல்ஹாசன், ஃபைனலிஸ்ட்டுகளுடன் உரையாடி பரிசுகள் வழங்கி சென்றார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் கோப்பையை கையில் எடுத்த கமல்

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கான கோப்பையை அறிமுகப்படுத்திய கமல், அந்த கோப்பையை  கையில் எடுத்து தூக்கி காட்டினார். 





Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: எனக்கு வந்த பிரச்னைகளை எதிர்த்து நின்றேன் - அர்ச்சனா

எனக்கு வந்த பிரச்னைகளை எதிர்த்து நின்றேன். அதுவே என் பலமாக மாறியது - அர்ச்சனா

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: "இந்த வீட்டிற்கு உயிர் கொடுத்தது நீங்க தான்” - கமல்

இந்த வீட்டிற்கு உயிர் கொடுத்தது நீங்க தான் (போட்டியாளர்கள்). இல்லையென்றால் இது ஒரு செட்டாக தான் இருக்கும் என்றார் கமல்ஹாசன். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: உலக சினிமாவில் விற்கு முடியாத தங்க மண்ணு" பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு!

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசனுக்கு தனியாக பாடல் பாடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. ”உலக சினிமாவில் விற்கு முடியாத தங்க மண்ணு" என்று பாராட்டுடன்  பாடல் பாடப்பட்டது.  

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பீக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசன்

பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசன் சென்றார். கமல்ஹாசனுக்கு தனியாக பாடல்கள் பாடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: ”புல்லி என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது" - மாயா

தன்னை Bully என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருப்பினும், நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். என்ன மாதிரி இங்கு இருந்த 7 பேர் யோசிக்கிறாங்க. அதனால் தான் என்னுடன் இருந்தாங்க என்று மாயா பேசியுள்ளார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: "பிக்பாஸ் வீடு எனக்கு தைரியத்தை கொடுத்து இருக்கு” - அர்ச்சனா

நான் யாரு என்று  இந்த வீடு புரிய வச்சியிருக்கு.  இந்த வீட்டில் நடந்த  பெரிய பிரச்சனை என்னை ரொம்ப காயப்படுத்தி இருக்கு.  கிண்டல், கேலி செய்றவங்களை எதிர்த்து பேசனும் என்று புரிய வச்சி இருக்கு இந்த வீடு. பிக்பாஸ் வருவதற்கு முன் பயந்த சுபாவத்துடன் இருந்த நான், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு, தைரியமான ஆளாக மாறியிருக்கேன் - அர்ச்சனா

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: எனது கேம் எனக்கு மிகவும் பிடித்தது - மணி

தொடக்கம் முதல் இப்போதுவரை எனது கேம் எனக்கு மிகவும் பிடிக்கும். பிரச்னை என்றால் பிரச்னை, ஃபன் என்றால் ஃபன், எண்டர்டைமெண்ட் என்றால் எண்டர்டைமெண்ட் என அனைவரிடமும்  இருந்தேன். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: நான் வீக் கண்டஸ்ட்டண்ட் இல்லை - அர்ச்சனா

நான் வீக் கண்டஸ்டன்ட் என கூறிய போட்டியாளர் ஒரு வீக் எண்டில் நான் தான் அவரின் வெற்றிக்கு தடையாக இருப்பேன் எனக் கூறியது நான் வீக் கண்டஸ்டண்ட் இல்லை என்பதை வெளிக்காட்டியுள்ளது. 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: விஷ்ணுவிடம் அன்பு உள்ளது - விஷ்ணு

விஷ்ணுவிடம் அன்பு உள்ளது, விஷ்ணுவுக்கு அழத்தெரியும். எனது அன்பு எனக்கு பிரச்னையாகிவிடக்கூடாது என்பதால் அதனை வெளிக்காட்டவில்லை என விஷ்ணு கூறியுள்ளார். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: நேர்மையாக இருக்கனும் என்பதில் உறுதியாக இருந்தேன் - மாயா

நான் வீட்டிற்குள் வந்ததில் இருந்து நேர்மையாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என மாயா தெரிவித்துள்ளார். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் வீட்டில் சிவாங்கி

குக்வித் கோமாளி பிரபலம் சிவாங்கி பிக்பாஸ் வீட்டிற்குள் கோக் ஸ்டூடியோ பாடகர்களுடன் பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்து பாடல் பாடினார். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: நல்ல புக் படிச்ச உணர்வு.. என் கேம சூப்பரா விளையாடினேன் - மாயா கிருஷ்ணன்!

“டாப் 5இல் இருப்பது நல்ல படம் பார்த்த, நல்ல புத்தகம் படித்த உணர்வைக் கொடுத்துள்ளது. நான் இங்கு நல்ல நட்பை சம்பாதித்துள்ளேன், என் வேலையை சரியாக செய்துள்ளேன். என் கேம சூப்பராக விளையாடினேன். உங்கள் அறிவுரையை நான் என்றைக்குமே எடுத்துச் செல்வேன்” என மாயா கூறியுள்ளார்.


 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: “என் மனசாட்சிப்படி விளையாடினேன்” - விஷ்ணு விஜய்

“"என் மனதுக்குள் பட்டர்ஃப்ளை ஓடுகிறது. இந்த இடத்துக்கு வர வேண்டும் என்பது என் கனவு. என் மனசாட்சிப்படி தான் விளையாடினேன். நான் எனக்கு நேர்மையாக இருந்ததால் தான் இங்கு இருக்கிறேன்" என விஷ்ணு பேசியுள்ளார்

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: 2 வாரம் தான் பிளான் பண்ணி வந்தேன்.. பிக்பாஸ் பைனல்ஸ் மேடையில் அர்ச்சனா பளிச்!

“நான் 2 வாரம் தான் நான் பிளான் பண்ணி வந்தேன். அதுக்கு பிறகு கிடைப்பதுலாம் போன்ஸ்னு நினைச்சேன். ஆனா  அந்த போனஸ் இவ்வளவு தூரம் என்னை எடுத்துட்டு வரும்னு நினைக்கல. வீட்டில் இருந்து வந்தபோது என்னை பெரிதாக எதுவும் மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றுதான் கூறினார்கள்” என அர்ச்சனா பேசினார்.


 





Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: சண்டை போட்டுதான் ஜெயிக்கணுமா.. சக ஃபைனலிஸ்டுகளை அட்டாக் செய்த மணி!

“சண்டை போட்டால் தான் இந்த லெவலுக்கு வர முடியும் என்பதை உடைக்க வேண்டும் என நான் விரும்பினேன். யாருடன் எனக்கு சண்டை நேரடியாக வருகிறதோ, அவர்களுடன் தான் சண்டை போட்டு தீர்க்க வேண்டும் என விரும்பினேன்” என மணிசந்திரா பேசியுள்ளார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: விவசாயி மாதிரி சந்தோஷமா இருக்கு.. உணர்ச்சிவசப்பட்ட தினேஷ்!

ஃபைனல்ஸ் மேடையில் இருப்பது பற்றி கமல்ஹாசன் எழுப்பிய கேள்விக்கு ஃபைனலிஸ்ட்டுகள் பதிலளித்தனர். அப்போது “பிக்பாஸ் ஃபைனல் டாப் 5வுக்குள் இருப்பது, விவசாயி அறுவடைக்கு சந்தோஷப்படுவது போல் உள்ளது. என் கான்ஃபிடன்ஸை உடைக்க நான் யாரையும் விடவில்லை” என தினேஷ் கூறினார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் வீடு ஒரு ஜெயில்; பிக்பாஸ் வீடு ஒரு நூலகம் - கூல் சுரேஷ்

பிக்பாஸ் வீடு ஒரு ஜெயிலைப் போன்றது. நம்மை அது பண்படுத்தும். பிக்பாஸ் வீடு கிட்டத்தட்ட ஒரு நூலகம். நாம் என்ன புத்தகத்தை எடுக்கின்றோம் என்பதைப் பொறுத்து நமது அனுபவம் அமையும் என கூல் சுரேஷ் கூறினார். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: சமூகவலைதளத்தில் புரளி பேசுகின்றனர் - ரவீனா

உண்மையான அன்பு கிடைத்தது. நமக்காக நாம் சுயநலமில்லாமலும் இருக்க வேண்டும், சுயநலத்துடனும் இருக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன். சமூகவலைதளங்களில் புரளி பேசுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். மக்களை நேரில் சந்திக்கும்போது அன்பு செலுத்துகின்றனர். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: நான் பெற்றது இதுதான் - விஜய் ஓபன் டாக்

இந்த சீசன் மூலம் நான் பெற்றது மக்களின் அன்பைப் பெற்றேன், பொருமையாக இருக்க கத்துக்கொண்டேன் என விஜய் வர்மா தெரிவித்துள்ளார். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: ஆறு பாடல்கள் எழுதிவிட்டேன் - நிக்சன்

வீட்டைவிட்டு வெளியே வந்து இதுவரை 6 பாடல்கள் எழுதியுள்ளேன் என நிக்சன் கூறியுள்ளார். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: பிக்பாஸ் வீட்டில் புரிந்துகொண்டது இதுதான் - பூர்ணிமா

பிக்பாஸ் வீட்டில் நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஆனால் நான் வீட்டில் ஒவ்வொருவரிடமும் நான் தனித்தனியாக எனது நிலைப்பாட்டினை சொல்லிக்கொண்டு இருந்தேன். 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: ஜான் சீனானு கத்திய கூல் சுரேஷ்.. ஜாலி பாட்டால் வாரிய கானா பாலா, நிக்சன்!

அனன்யா, விஜய் வர்மா, விசித்ரா, ஜோவிகா, கூல் சுரேஷ், அக்‌ஷயா என பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எவிக்டான போட்டியாளர்களுக்கு ஒன்லைன் பன்ச் தந்து ஜாலியான பாடல் மூலம் கானா பாலா, நிக்சன் இருவரும் வரவேற்றனர்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: டான்ஸ், பாட்டுடன் தொடங்கிய கிராண்ட் ஃபினாலே

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே மேடையில் கானா பாலா, நிக்சன் ஆகியோர்  பாட்டு பாடி வருகின்றனர். இவர்களுடன் விசித்ரா, அக்ஷயா, அனன்யா, பூர்ணிமா, விஜய் வர்மா, ஜோவிகா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடனம் ஆடி வருகின்றனர். 





Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: என் வீரத்தைக் காட்டும் இடமில்லை... பன்ச் உடன் தொடங்கிய கமல்!

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்காததாக தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் நிகழ்ச்சி தொடங்கியதும் பதிலளித்தார். “புதிய தலைமுறை பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள், என் வீரத்தைக் காட்டும் இடம் இதுவல்ல” என கமல் கூறியுள்ளார்.

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: தொடங்கியது பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் முற்றிலும் கருப்பு நிற உடையில் மேடையில் தோன்றினார். 





Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: வைரலாகும் ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய கிராண்ட் ஃபினாலேவுக்கான 9வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.  இறுதிப் போட்டியாளர்கள் தங்கள் எண்ணங்களையும், அனுபவத்தையும் நேரலையில் பகிர்ந்து கொள்ளுவது போன்று ப்ரோமோவில் உள்ளது. 





Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: ஒரு மணி நேரத்தில் தொடங்கப்போகும் கிராண்ட் ஃபினாலே

இன்னும் ஒரு மணி நேரத்தில் (மாலை 6 மணி) பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. 





: Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: டைட்டில் வின்னரா? - ட்விட்டரில் டிரெண்டாகும் அர்ச்சனா

#BB7TitleWinnerArchana என்று ஹேஷ்டேக்குகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதே சமயத்தில் ரீயல் வின்னர் பிரதீப் (#BB7RealWinnerPradeep) என்று ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகிறது. 


 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: "உலக சினிமாவில் விற்கு முடியாத தங்க மண்ணு" பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு!

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசனுக்கு தனியாக பாடல் பாடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. ”உலக சினிமாவில் விற்கு முடியாத தங்க மண்ணு என்று பெயரு என்ன ஒருதடைவை சொல்லுங்க மக்கா. அவரு வேறு யாரு உலக நாயகன் கமல்ஹாசனுக்கா" என்று அவருக்கு பாராட்டுடன்  பாடல் பாடப்பட்டது.  இந்த காட்சிகள் ப்ரோமோவாக  இணையத்தில் வெளியாகின.





Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்

இன்றைய நிகழ்ச்சிக்கான 7வது ப்ரோமோ வெளியாகியது. அதில், கமல்ஹாசனுக்கு தனியாக பாடல்கள் பாடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.  





Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: இரண்டாவது இடத்தில் இருப்பது யார்?

அர்ச்சனாவை அடுத்து, இரண்டாம் இடத்தில் இருப்பது மணி சந்திரா என்றும் மூன்றாம் இடத்தில் மாயா இருப்பதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.  அதேபோல, தினேஷ் மற்றும் விஷ்ணு எலிமினேட் செய்யப்படுவதாகவும்  கூறப்படுகிறது. 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: அதிக வாக்குகளுடன் அர்ச்சனா முன்னிலை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்டரியாக வந்த அர்ச்சனா, அதிக வாக்குகள் பெற்று முன்னிலை இருப்பதாக தெரிகிறது. 

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Blog: ப்ரோமோக்கள் வெளியீடு

இன்றையை நிகழ்ச்சிக்கான் ப்ரோமோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.  அந்த ப்ரோமோக்களில் கலை நிகழ்ச்சிகளுடன் கிராண்ட் ஃபினாலே தொடங்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசன் உள்ளே செல்வது போன்ற ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன. 





Bigg Boss 7 Tamil Grand Finale: களத்தில் 5 போட்டியாளர்கள்

பிக்பாஸ் 7  சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் களத்தில் உள்ளனர். 

Bigg Boss 7 Tamil Grand Finale: இன்று மாலை 6 மணிக்கு கிராண்ட் ஃபினாலே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது.  

Background

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இன்றுடன் முடிவடைகிறது.  இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கிராண்ட் பைனல் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி சிறப்புனா கலைநிகழ்ச்சியுடன் எண்ட் கார்ட் போடவுள்ளது.  கடந்த ஆக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது.


மொத்தம் 23 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி  தொடங்கியது.  டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.  ஒரு மாதத்திற்கு 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். 


பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, ஆர்.ஜே. அர்ச்சனா ஆகியோர் நுழைந்தனர். இதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கப் தொடங்கியது.  முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி,  அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்தது.  


போட்டியாளர்களைப் பொறுத்தவரையில் அனைவருமே  பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய முதல் நாளில் இருந்து முட்டி மோதி டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டது மட்டும் இல்லாமல், மக்கள் மனதிலும் இடம் பிடித்து டைட்டிலை நெருங்கி வருகின்றனர். 


சண்டை சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இறுதியில் அதாவது, 98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர். 


இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.