பிக்பாஸ் கிராண் ஃபினாலே


விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இன்றுடன் முடிவடைகிறது. மாலை 6 மணிக்கு கிராண்ட் ஃபினாலே தொடங்கி சிறப்பான கலை நிகழ்ச்சிகளுடம் தொடர்ந்தது. கடந்த ஆக்டோபர் 1ஆம் தேதி  மொத்தம் 23 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி  கோலாகலமாக தொடங்கப்பட்டது. டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.  ஒரு மாதத்திற்கு 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.


வைல்டு கார்டு  


பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, ஆர்.ஜே. அர்ச்சனா ஆகியோர் நுழைந்தனர். இதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கப் தொடங்கியது.  முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி,  அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்தது. 


பிக்பாஸ் டைட்டில் வின்னர்


பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் விஷ்ணு , தினேஷ் , மாயா கிருஷ்ணன் , மணி சந்திரா ஆகிய நான்கு பேர் வெளியேற பிக்பாஸ் டைட்டிலை இறுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வென்றுள்ளார் வி.ஜே அர்ச்சனா.


ஒரு சில வாரங்களே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எண்ணத்துடன் தான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததாகவும்,  தற்போது டைட்டில் பரிசை வென்றுள்ளதாகவும் அர்ச்சனா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இறுதிவரை கடுமையாக போட்டி போட்டு வந்த மணிசந்திரா இந்த சீசனில் ரன்னர் அப் ஆக நிறைவு செய்துள்ளார். இதுவரை நடந்த சீசன்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று டைட்டிலை வென்றவர் என்றால் அது அர்ச்சனா மட்டும்தான். இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஃபினாலேவுக்கு தகுதி பெற்றவர்கள் உள்ளனர். ஆனால் டைட்டில் வென்றவர் இல்லை. 


பல்வேறு சவால்களை பிக்பாஸ் வீட்டில் எதிர்கொண்டார் அர்ச்சனா . கூடுதலாக போட்டியாளர்கள் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் அர்ச்சனாவை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்து வந்தனர். ஆனால் பிக்பாஸ் ரசிகர்களின் ஆதரவு அர்ச்சனாவுக்கு பெரும்பான்மையாக இருந்ததால் அவர் தொடர்ந்து வீட்டிற்குள் இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவைப் பெற்று அவர்களின் வாக்குகளைப் பெற்ற அர்ச்சனா பிக்பாஸ் டைட்டிலை வென்றது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேல் ரசிகர்களின் ஈடுபாட்டை தக்கவைக்கும் படி அமைந்துள்ளது.