தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதிகட்டத்தினை எட்டியுள்ளது. 85 நாட்களைக் கடந்த இந்த போட்டியில் வீட்டிற்குள் இன்னும் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் 8 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
டிக்கெட் டூ ஃபினாலே:
இதில் கடந்த வாரங்களில் நடைபெற்ற டாஸ்க்குகளின் அடிப்படையிலும் போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையிலும் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் டிக்கெட் டூ ஃபினாலேவில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளனர்.
இந்நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி நேற்று முன்தினத்தில் இருந்து நடைபெற்று வருகின்றது. இதில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று 15 பாய்ண்டுகளை எட்டும் ஒரு போட்டியாளர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற டேன்ஸ் மாரத்தான் டாஸ்கில் சிறப்பாக விளையாடியதற்காக நிக்சன், தினேஷ் மற்றும் பூர்ணிமா ஆகியோர் தலா ஒரு புள்ளியுடன் இந்தப் போட்டியில் களமிறங்கினர்.
முதல் நாள் போட்டியில் விஷ்ணுவுக்கு மூன்று புள்ளிகளும், மணிக்கு இரண்டு புள்ளிகளும் மாயாவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்றைய போட்டியில், நிக்சன் மூன்று புள்ளிகளும், மாயாவுக்கு இரண்டு புள்ளிகளும், பூர்ணிமாவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.
கேம் ப்ளான் போடும் விஷ்ணு, தினேஷ்:
இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் விஷ்ணு மற்றும் தினேஷ் கேம் ப்ளான் குறித்து பேசியிருக்கின்றனர். அதாவது, தினேஷ் கூறுகையில், "நம்ம இரண்டு பேருக்கும் வாய்ப்பு வந்தால் முதலில் எலிமினேட் செய்யப்போவது யார்? என்று தினேஷ் கேட்க, அதற்கு நிக்சன் என்று விஷ்ணு கூறுகிறார்.
இரண்டாவதாக யார் எலிமினேட் செய்வீர்கள் என்று தினேஷ் கேட்க, பூர்ணிமா” என்று விஷ்ணு சொல்லுகிறார். பின்னர், "விசித்ராவை மூன்றாவது டார்க்கெட் செய்யலாம் என்று தினேஷ் கூற, அதற்கு விஷ்ணு, விசித்ராவை டார்க்கெட் செய்றது வேஸ்ட் என்று கூறுகிறார். அதற்கு தினேஷ், மூன்றாவது டார்க்கெட் மாயாவை செய்தால், விசித்ரா நம்மளை எலிமினேட் செய்வார் என்று தினேஷ் கூற, அப்போ விசித்ராவே ஒகே” என்று விஷ்ணு கூறியப்படி ப்ரோமோ முடிகிறது.
ஏற்கனவே, மாயா, நிக்சன், பூர்ணிமா ஆகியோர் இவர்கள் மோசமாக விளையாடுவதாக குற்றம் சாட்டி வரும் நிலையில், தினேஷ், விஷ்ணு சேர்ந்து பேசி சக போட்டியாளர்களை டார்க்கெட் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க