தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதிகட்டத்தினை எட்டியுள்ளது. 85 நாட்களைக் கடந்த இந்த போட்டியில் வீட்டிற்குள் இன்னும் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.  இந்நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் 8 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.


டிக்கெட் டு ஃபினாலே


இதில் கடந்த வாரங்களில் நடைபெற்ற டாஸ்க்குகளின் அடிப்படையிலும் போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையிலும் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் டிக்கெட் டூ ஃபினாலேவில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளனர். 


இந்நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி நேற்றைய எபிசோடில் இருந்து நடைபெற்று வருகின்றது. இதில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று 15 பாய்ண்டுகளை எட்டும் ஒரு போட்டியாளர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற டேன்ஸ் மாரத்தான் டாஸ்கில் சிறப்பாக விளையாடியதற்காக நிக்சன், தினேஷ் மற்றும் பூர்ணிமா ஆகியோர் தலா ஒரு புள்ளியுடன் இந்தப் போட்டியில் களமிறங்கினர். 


முயல் முயல்..


நேற்றைய டாஸ்கில், ஒவ்வொரு போட்டியாளரும் தனக்கு நேராக உள்ள முயலுக்கு சிறிய குடில் கட்டவேண்டும். பின்னர் ஒவ்வருவருவரும் குடில்களை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டு முயல்களை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் ஒரு போட்டியாளரின் முயலை இன்னொரு போட்டியாளர் எடுத்துவிட்டால் அவர் இந்த டாஸ்கில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்.


மேலும் குடிலை கலைத்துவிட்டு முயலை எடுக்கும் வாய்ப்பு ஒரு நேரத்தில் மூன்று போட்டியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.  ஒவ்வொரு வாய்ப்புக்குமான நேரம் ஒரு நிமிடம் என விளையாடும் நபர்கள் மற்றவர்களை எலிமினேட் செய்யவும் விளையாடலாம். தொடக்கத்தில் போட்டியாளர்கள் அவரவர் வெற்றியடைய வேண்டும் எனும் நோக்கில் விளையாடுவார்கள் என நினைத்தபோது, மாயா சக போட்டியாளரான ரவீனாவின் குடிலையும், விஷ்ணு நிக்சனின் குடிலையும் களைத்தனர். 


இது யாருமே எதிர்பார்க்காத கேம் ப்ளேன் என்பதால், இதன் பின்னரும் போட்டியாளர்கள் இதே கேம் ப்ளேனை ஃபாலோ செய்தார்கள். இதனால் போட்டியில் மாயா மற்றும் பூர்ணிமாவின் ஆட்டத்தினால் ரவீனாவை எலிமினேட் செய்தனர். தினேஷ், விசித்ரா மற்றும் பூர்ணிமா போட்டி விதிகளின்படி எலிமினேட் ஆனார்கள்.  ஆனால் அதற்குள் விஷ்ணு மூன்று முயல்களை எடுத்துவிட்டார்.


இறுதியில் மாயா, விஷ்ணு மற்றும் மணி இருந்தனர். மாயா தனது முயலை எடுத்தபின்னர் மட்டும் இல்லாமல் மற்றொரு போட்டியாளரின் முயலை எடுக்கவும் முயற்சி செய்தார். ஆனால் மணி மாயா களைத்துக்கொண்டு இருந்த விஷ்ணுவின் குடிலில் இருந்து ஒரு கல்லை எடுத்து தனது உடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டார்.


விஷ்ணுவின் அதிரடி ஆட்டம் 


இதனால் மாயாவால் அந்த குடிலை முழுவதுமாக அகற்ற முடியவில்லை. இதனால் விஷ்ணு 4 முயல்களைக் கைப்பற்றினார். இறுதிவரை களத்தில் இருந்த மூன்று போட்டிளார்களில் அதிக முயல்களை எடுத்த விஷ்ணுவுக்கு மூன்று புள்ளிகளும், மணிக்கு இரண்டு புள்ளிகளும் மாயாவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. 


மாயா, பூர்ணிமா நிக்‌சன் மற்றும் விசித்ரா இணைந்து ஒரு டீம் கேமும் விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் ஆகியோர் இணைந்து ஒரு டீம் கேமும் விளையாடினர். இதில் தோல்வியைச் சந்தித்த மாயா, பூர்ணிமா மற்றும் நிக்சனால் தங்களது தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியாததைப்போல் கூடிக் கூடி பேசிக்கொண்டு இருந்தனர்.


இந்நிலையில் இன்று காலை விஷ்ணு தான் எப்படி 4 முயல்களைக் பைப்பற்றினார் என்பதை போட்டியாளர்களிடம் விரிவாக கூறும் வீடியோவை பிக்பாஸ் பிரியர்கள் சமூக வலைதளங்களில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


விளக்கிய விஷ்ணு


விஷ்ணு தனது சக போட்டியாளர்களான மாயா மற்றும் பூர்ணிமாவின் ஆட்டத்தை பார்த்துதான் தனது கேம் ப்ளேனை அமைத்துக்கொண்டதாக கூறுகின்றார். அவரை முயல் மன்னன் என மற்ற போட்டியாளர்கள் சியர் செய்கின்றனர். அப்போது மாயா “நம்ம ஆடறத பாத்துதான் அவருக்கே புரிஞ்சு இருக்கு” எனக் கூறினார்.


மேலும் விஷ்ணு பேசுவதைப் பார்த்து மாயாவும் பூர்ணிமாவும் தொடர்ந்து தங்களுக்குள் கமெண்ட்ஸ்கள் பாஸ் செய்து சிரித்துக்கொண்டு இருந்தனர். இதற்கு விஷ்ணு ரசிகர்களோ, “இதுவே மாயாவும் பூர்ணிமாவும் தங்களது ப்ளேனின்படி வெற்றி பெற்றிருந்தால் ஆட்டம் வேறு மாதிரி ஆகியிருக்கும். மாயா மற்றும் பூர்ணிமாவின் பொருளையே (கேம் ப்ளேன்) எடுத்து அவங்களயே போட்டு இருக்காரு விஷ்ணு” என சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.