Biggboss Ultimate : அழுகாச்சி போதும்.. ஆட்டம் பாட்டம் வேணும்... பிக்பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கும் சாண்டி

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர் வைல்ட் கார்டு மூலமாக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தமிழ்நாட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள் ஆவார்கள். பிக்பாஸ் ஷோவிற்கு கிடைத்த வரவேற்பால் பிகபாஸ் அல்டிமேட் என்ற 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் விலகலுக்கு பிறகு நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இதனால், பிக்பாஸ் அல்டிமேட்டின் டி.ஆர்.பி. எகிறி ரசிகர்களும் அதிகளவில் பார்த்து வருகின்றனர்.

Continues below advertisement


இந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த விறுவிறுப்புக்கு மேலும் கூடுதல் விறுவிறுப்பை ஏற்றும் விதமாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் மீண்டும் உள்ளே வர உள்ளார். ஏற்கனவே ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த நடன இயக்குனர் சாண்டி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாண்டி மாஸ்டர் வைல்ட் கார்டு மூலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, சாண்டி மாஸ்டர் மீண்டும் பிக்பாஸ் ஷோவிற்குள் வர இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அளவுக்கதிகமாக சண்டைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால், அதை தவிர்ப்பதற்காகவும் ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காகவும் காமெடி பிரபலங்களை களமிறக்கி வருகிறது பிக்பாஸ்.

கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம் சதீஷ் முதலில் களமிறக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து பாலா களமிறக்கப்பட்டார். சதீஷ் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்ததால் பாலா களமிறக்கப்பட்டார். தற்போது, சாண்டியும் களமிறங்க உள்ளதால் வரும் எபிசோட்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஏற்கனவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப், பாலாஜி, ஸ்ருதி, தாமரை ஆகியோர் உள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் வெளியேற உள்ளார். வனிதா, சினேகன், தாமரை ஆகியோர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். 


மேலும் படிக்க : Thalapathy66: ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் தளபதி விஜய்யின் 66 திரைப்படத்தின் ஷூட்டிங்?

“10 பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளேன்... மீண்டும் கேட்பேன்...!” - பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

RRR Review: பாகுபலிக்கு டஃப் கொடுக்கிறதா ஆர்.ஆர்.ஆர்? எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்தாரா ராஜமெளலி..? எப்படி இருக்கு ஆர்.ஆர்.ஆர்?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola