பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.


விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி அமைந்துள்ளது. தற்போது, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வெளியேறிய பிறகு சிம்பு தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். கமல்ஹாசன் தொகுப்பாளராக களமிறங்கியது முதல் பிக்பாஸ் அல்டிமேட் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.


இந்த நிலையில், இந்த வாரத்திற்கான பிக்பாஸ் எவிக்‌ஷன் நடைபெற உள்ளது.  இந்த வாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 2 நபர்களை வெளியேற்ற பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சீசனில் பாலா, நிரூப், தாமரை, சுருதி, தாமரை, சுரேஷ் தாத்தா, அனிதா உள்பட பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.




இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் செய்தித்தொகுப்பாளராக பிரபலமான அனிதா சம்பத்தின் செயல்பாடு ரசிகர்கள் பலரையும்  முகம் சுளிக்க வைத்தது. அனிதா சம்பத் சிம்புவை பற்றி பேசியது, நிரூப்பை ஆபாசமாக திட்டியது, தாமரையுடன் சேர்ந்து இரட்டை அர்த்தத்தில் பேசியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் அனிதா மீது ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.


மேலும், சுருதி மீதும் இந்த வாரம் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், இந்த வாரம் அனிதா சம்பத்தும், ஸ்ருதியும் குறைந்த அளவிலான வாக்குகளே பெற்றுள்ளனர். இதனால், இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் நபராக அனிதா சம்பத் மற்றும் ஸ்ருதி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிதாவின் செயல்பாடுகளால் அவரை சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.




பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் தாத்தா, சுஜா, ஷாரீக், அபிநய், தாடி பாலாஜி, வனிதா, சினேகன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்டு கார்டு மூலமாக சுரேஷ் தாத்தா, சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் களமிறங்கினர். 

மேலும் படிக்க : RRR PreRelease: ஒரே மேடையில் நடனமாடிய ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர் - அரங்கத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

மேலும் படிக்க : உதவி இயக்குநர் டூ இயக்குநரான மதிமாறன்... - மேடையில் ரகசியத்தை போட்டு உடைத்த வெற்றிமாறன்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண