ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தளபதி விஜய்யின் பீஸ்ட் வரும் ஏப்ரல் 13 அன்று வெளிவர இருக்கிறது. 
இந்நிலையில், விஜய்யின் அடுத்த திரைப்படம் பெயரிடப்படாத ‘தளபதி 66’ இன் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.


பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமானது. இப்போது, ஏபரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கலாம் என்பது விஜய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான நியூஸ். 


கார்த்தி நடிப்பில் வெளிவந்த தோழா படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ’தளபதி 66’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருந்தது.


மேலும், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவும், பட்டாஸ் படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாதாவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் இதுவரைக்கும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இதைப்பற்றி வெளியாகவில்லை. மேலும், இந்த படத்தில் விஜய் உடன் கில்லி, போக்கிரி,சிவகாசி, வில்லு ஆகிய படத்தில் இணைந்து நடித்த பிரகாஷ் ராஜ் இணைய இருப்பதாகவும் தகவல். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.விஜய் உடன் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராயும் இந்த படத்தில் இணைவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


 






 


வம்சியுடன் நடிகர் விஜய் இணையும் படத்தில் நடனம் அமைப்பதற்கு பிரபுதேவாவுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்  வெளியாகியுள்ளது. விஜய் மிகச்சிறப்பாக நடனமாடுபவர் என்பதால் பிரபுதேவா நடனம் அமைத்தால் அது வேறு லெவலில் இருக்கும் எனவும் இந்த காம்போவுக்காக காத்திருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


 தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தளபதி 66 படம் எப்போது ரீலீஸ் ஆகும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர