Vichitra - Dinesh: பிக்பாஸ் வீடு தாண்டியும் தொடரும் விசித்ரா - தினேஷ் மோதல்: பாதியிலேயே நின்ற ஷூட்டிங்: என்ன நடந்தது?
Bigg Boss Vichitra: விசித்ராவின் விருப்பத்தை தினேஷிடம் கூறி சம்மதம் கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது விசித்ராவுடன் சேர்ந்து விளையாட தனக்கு விருப்பம் இல்லை என தினேஷ் கூறி விட்டார்.
Continues below advertisement

விசித்ரா, தினேஷ்
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்டாகாகசம் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகை விசித்ரா, ஷூட்டிங்கில் சண்டையிட்டுக் கொண்டு பாதியிலேயே சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் “அண்டாகாகசம் 2” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முழுவதும் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியான இதில் பங்கேற்க அனன்யா, அக்ஷயா, விஷ்ணு, விசித்ரா, ரவீனா மற்றும் தினேஷ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசித்ரா, தினேஷ் உட்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் வந்துள்ளனர். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்காக விசித்ரா கோபித்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக நிகழ்ச்சியில் இருந்தவர்கள் பேசியபோது, ”பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சி குறித்த அனைத்தும் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி எல்லாரும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தனர். ஆனால், ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு விசித்ரா, தனது டீமுடன் தினேஷ் விளையாட வேண்டும் எனக் கேட்டார்.
இதனால் விசித்ராவின் விருப்பத்தை தினேஷிடம் கூறி சம்மதம் கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது விசித்ராவுடன் சேர்ந்து விளையாட தனக்கு விருப்பம் இல்லை என தினேஷ் கூறி விட்டார். அதாவது விசித்ராவுடன் விளையாட தனக்கு ஆட்சேபனை இல்லை என்ற தினேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி விசித்ரா காயத்தை ஏற்படுத்தி விட்டார் என்றார். மேலும் விசித்ராவின் அந்தப் பேச்சால் தானும் தனது குடும்பமும் ரசிகர்களும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், விசித்ராவுடன் இணைந்து தான் கேம் விளையாடுவது சரியாக இருக்காது என்றும் தினேஷ் கூறியுள்ளார்.
ஆனாலும் தினேஷின் இந்த பதிலை ஏற்காத விசித்ரா, தான் ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் என்றும், தனது கருத்துக்கு மதிப்பு தரவில்லை என்றும் கூறி கோபப்பட்டுள்ளார். மேலும், நிகழ்ச்சியின் யூனிட் கெஞ்சாத குறையாக பேசியும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கோபத்துடன் விசித்ரா வெளியேறியுள்ளார். திடீரென நிகழ்ச்சியில் இருந்து விசித்ரா வெளியேறியதால் வேறு வழியில்லாமல் ரவீனாவுடன் வந்த ஒருவரை நடிக்க வைத்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிலிருந்த போது விசித்ரா, தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். தினேஷ்-ரச்சிதா விவகாரம் குறித்துக் கேமரா முன்பாகப் போய் பேசிய விசித்ரா, “இவர் கூட ஒரு பொண்ணு எப்படித்தான் குடும்பம் நடத்த முடியும்” என்கிற விதத்தில் பேசியிருந்தார். இதனால், தினேஷ் ஆதரவாளர்கள் மட்டுமல்ல அந்த வார இறுதியில் கமலுமே கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Continues below advertisement
மேலும் படிக்க: Director Gokul : ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க.. வாழ்க்கை காலியாகிடும்.. 'சிங்கப்பூர் சலூன்' இயக்குநர் கோரிக்கை
Just In
Siragadikka Aasai: சீதா கல்யாணத்தால் பிரிந்த முத்து - மீனா.. கடுப்பான ரசிகர்கள்.. அடுத்த நடக்க போவது என்ன?
அவரால் தான் எங்களுக்கு மகள் கிடைத்தாள்...ஆமிர் கான் உடனான ரகசியத்தை சொன்ன விஷ்ணு விஷால்
ஆல்யா மானசா வீட்டிற்கு திடீர் விசிட்.. குக்கர் வெடித்து மரணமா.. ஷாக் ஆன விஜே மணிமேகலை
Anushka Shetty : காதலனை பற்றி மனம் திறந்த அனுஷ்கா.. யார் அவர் தெரியுமா?.. தெய்வீக காதல்
சூர்யாவுடன் நடிப்பது என் வாழ்நாள் கனவு.. ரொம்ப தீவிரமான ரசிகை.. லவ் மேரேஜ் நடிகை ஓபன் டாக்
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்.. கண்டிஷன் போட்ட நீதிபதி.. மீறினால் தண்டனையா!
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.