சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியல் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. சிவா இயக்கத்தில், ரதிபாலா வசனத்தில் என் ராய் திரைக்கதையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும், இந்த சீரியலில் டெல்னா டேவிஸ், விராட் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் வினயா பிரசாத், அகிரா, கன்யா பாரதி, நந்தன் லோகநாதன், பிர்லா பாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
அனுதினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் நடிகை சுஜா வருணி எண்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். பிளஸ் 2 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி ஆன சுஜா, சூர்யாவின் மாயாவி, அர்ஜூனின் வாத்தியார், ரஜினியின் குசேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இது மட்டுமன்றி, பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். சுஜா பிரபல நடிகர் சிவாஜி பேரனான சிவாஜி தேவ்வை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அத்வைத் என்ற ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்த சுஜா, சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு ஏராளனமான ரசிகர்கள் உருவாகினர். இந்த நிலையில்தான் தற்போது அவர் அன்பே வா சீரியலில் எண்ட்ரி ஆகி உள்ளார். இது தொடர்பான ப்ரோமோவும் வெளியாகி அனைவரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்