Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் ரவீனா, மணியை சக போட்டியாளர்கள் கார்னர் செய்து வரும் நிலையில், இருவரும் இனிமே நம்ம பர்சனலில் மற்றவர்களை விடக்கூடாது என பேசி கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீட்டிற்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதுவரை நடந்த 6 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, அனன்யா, வினுஷா, பவா செல்லதுரை, நிகசன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, பூர்ணிமா ரவி, விசித்ரா, அக்ஷயா, மணி, விஜய் என 18 பேர் பங்கேற்றனர். இதில் அனன்யா, பவா செல்லதுரை மற்றும் விஜய் கடந்த 3 வாரங்களில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்திற்கு கேப்டன்ஷிப் பதவிக்கு பூர்ணிமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் வாக்குகெடுப்புகள் தொடங்கியது. அதில் பிரதீப் மற்றும் மாயாவை அதிகமான பேர் நாமினேட் செய்துள்ளனர். மணி சந்திராவையும் ரவீனாவை காரணம் காட்டி சிலர் நாமினேட் செய்துள்ளனர். ஏற்கெனவே போட்டியில் மணிக்கு ரவீனா தடையாக இருப்பதாக சக போட்டியாளர்கள் கமலிடம் முறையிடனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாசிட்டிவாக விளையாடி வருவதாகவும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் மணியும், ரவீனாவும் தனியாக பேசிக்கொள்ளும் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ரவீனாவிடம் ”நம்ப பர்ஸ்னலில் யாரையும் உள்ளே விட்ராத. அதேபோல் மத்தவங்க பர்ஸ்னலிலும் நாம போக வேண்டாம்” என மணி பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதேபோன்று மற்றொரு காட்சியில் பேசாமல் இருக்கும் நிக்சனை ஐஷூ சமாதானம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களுக்குள் சண்டைக்கு பஞ்சம் இருக்காது என்பதற்கு போல், காதல் ஜோடிகளுக்கும் பஞ்சமிருந்தது இல்லை. முதல் சீசனில் ஆரவ், ஓவியாவும், 2வது சீசனில் யாஷிகா ஆனந்த், மகத்தும், மூன்றாவது சீசனில் லாஸ்வியா -கவினும் காதல் சர்ச்சைகளில் சிக்கினர். அடுத்தடுத்த சீசன்களிலும் பாலா - ஷிவானி, அமீர்- பவானி, ஷிவின் - கதிரவன் ஜோடிகள் காதல் சர்ச்சையில் சிக்கின. அந்த வரிசையில் தற்போது ரவீனா - மணி இணைந்துள்ளனர்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு போலயே... 5 வைல்டு கார்டு என்ட்ரி: ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!
பாஜகவில் இருந்து விலகிய கெளதமி பரபரப்பு புகார் - சிக்கலில் சி.அழகப்பன் - என்ன நடந்தது?