Bigg Boss 7 Tamil: இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு போலயே... 5 வைல்டு கார்டு என்ட்ரி: ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!

முந்தைய போட்டிகளில் ஒரு வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும். போட்டியில் மாறுதல் ஏற்படும். இப்போது வீடே இரண்டாக இருக்கிறது. அதனால் வைல்டு கார்டு எண்ட்ரி 5 பேர் அனுப்பப்பட உள்ளனர்.

Continues below advertisement

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

Continues below advertisement

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று இரு வீடுகளில் பிரித்து வைக்கப்பட்டனர். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு, ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமைக்க வேண்டும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 

முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது வாரத்தில் பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக தானாகவே வெளியேறினார். அதை தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார். 18 போட்டியாளர்களில் 3 பேர் வெளியேறியுள்ளதால் 15 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த வார கேப்டன்ஷிப்பாக பூர்ணிமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்த வாரத்தில் 4வாரத்தில் வைல்டு கார்டு என்ட்ரி இருப்பதால், யார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் பேசியுள்ள கமல்ஹாசன், ” பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட் 15 பேர் விளையாடி கொண்டிருக்கிறார்கள். முந்தைய போட்டிகளில் ஒரு வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும். போட்டியில் மாறுதல் ஏற்படும். இப்போது வீடே இரண்டாக இருக்கிறது. அதனால் வைல்டு கார்டு எண்ட்ரி 5 பேர் அனுப்பபட உள்ளனர். இவர்கள் ஆட்டத்தையும் பிரிஞ்சிக்கிட்டு, மக்கள் கருத்தையும் தெரிந்து கொண்டு உள்ளே செல்ல போகிறார்கள்” என கூறியுள்ளார். 

வைல்டு கார்டு என்ட்ரி 5 பேர் என கமல் கூறியுள்ளதால், அந்த 5 பேர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே கானா பாலா மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே செல்வார்கள் என கூறப்படும் நிலையில் மேலும் 3 பேர் யாராக இருக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க: Highest Opening : ஜவானை பின்னுக்கு தள்ளிய லியோ.. முதல் நாளே பாக்ஸ் ஆஃபீஸை தெறிக்கவிட்ட இந்திய திரைப்படங்கள்!

கட்சியில் இருந்து விலகிய கெளதமி பரபரப்பு புகார் - சிக்கலில் பாஜக பிரமுகர்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola