தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ராதிகாவுடன் திருட்டுத்தனமாக குடும்பம் நடத்தி வரும் கோபி எப்போது பாக்கியலட்சுமியிடம் மாட்டுவார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது அவர் மாட்டுவதற்கு மீண்டும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.


பாக்கியலட்சுமியின் மாமனார் ராமமூர்த்திக்கு பிறந்தநாள் விழாவை கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ராமமூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு செழியனும், ஜெனிபரும் பேசுகின்றனர். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினால் மிகப்பெரிய கஞ்சனாக உலா வரும் செழியனே தாத்தாவிற்கு பிறந்தநாள் பரிசு வாங்கிக்கொடுக்க ஆசைப்படுவது ரசிகர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




செழியனே தாத்தாவிற்கு பிறந்தநாள் பரிசு வாங்கித் தருகிறேன் என்று கூறியதால் ஜெனிபர் தாத்தாவிற்கு நகையோ அல்லது அவரது அறையில் பெரிய டி.வி.யோ வாங்கித்தரலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். அதைக்கேட்டு வாயைப் பிளந்த செழியன் அய்யய்யோ… அவ்ளோ பட்ஜெட் எல்லாம் இல்ல.. என்று கூறிவிட்டு, தாத்தாவிற்கு ஒரு வேஷ்டி, சட்டை வேண்டுமானால் எடுத்துக் கொடுக்கலாம் என்று கூறுகிறான்.


மேலும் படிக்க : ”அரசியலுக்கு போனா பொய் சொல்லணும்” என்ற சிவகார்த்திகேயன்! - அதிர்ச்சியடைந்த உதயநிதி !


இதைக்கேட்டு கடுப்பான ஜெனிபர் நீ கஞ்சம்னு இந்த வீட்ல இருக்கவங்களுக்கு தெரியும்.. அதை நீ திரும்ப திரும்ப ப்ரூப் பண்ற என்று திட்டுகிறார். செழியனை ஜெனிபரை வறுத்தெடுக்கும் அதே தருணத்தில் ராமமூர்த்தியின் பிறந்தநாள் விழாவிற்கு ராதிகாவை அழைக்கவும் திட்டமிடுகின்றனர்.




ராதிகா இந்த விழாவிற்கு மயூருடன் பங்கேற்க பாக்கியாவே நேரில் சென்று அழைப்பதற்கும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று லேட்டஸ்ட் ப்ரோமா வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை மீண்டும் எகிற வைத்துள்ளது. கோபி எப்போது மாட்டுவார் என்று ஆவலோட உள்ள ரசிகர்களுக்கு இந்த வார எபிசோட் ஒரு விருந்தாகதான் இருக்கப்போகிறது.


மேலும் படிக்க : KGF actor death: கேஜிஎஃப் நடிகர் பெங்களூருவில் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி 


 மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண