தெலுங்கு சினிமா, தென்னிந்திய சினிமா தாண்டி ஒட்டு மொத்த இந்தியாவும் திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இணைய மாட்டார்களா எனக் காத்திருக்கும் ஜோடி பிரபாஸ் - அனுஷ்கா.


கெமிஸ்ட்ரியால் அலறவிட்ட பாகுபலி - தேவசேனா ஜோடி!




தெலுங்கு ஆடியன்ஸ்களை பில்லா, மிர்ச்சி படங்களின் மூலமாகக் கவர்ந்த இந்த ஜோடி, பாகுபலி 1 மற்றும் 2  படங்களின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவைக் கவர்ந்தது.


அமரேந்திர பாகுபலி - தேவசேனாவாக நடித்த இவர்களது ஜோடிப் பொருத்தம் பாகுபலியில் மிகக் கச்சிதமாக அமைந்திருந்த நிலையில், இவர்கள் இணைந்து நடித்த பழைய படங்களான பில்லா, மிர்ச்சி படங்களும் அதிகம் ரீவாட்ச் செய்யப்பட்டன.




Vanitha vijayakumar : உண்மையான ஹீரோ காயப்படுத்தமாட்டார்.. அன்று அப்படி, இன்று இப்படி! அண்ணனை வாழ்த்திய வனிதா !




திரையைத் தாண்டி ரசிக்கப்பட்ட ஜோடி


மேலும், இவர்கள் இணைந்து அளித்த பேட்டிகளும் இவர்களது இனம்புரியாத கெம்க்ஸ்ட்ரியால் இணையம் முழுவதும் ஹிட் அடித்தன. திரை தாண்டி இவர்கள் நிஜத்திலும் காதலில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் இன்று வரை தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.




இந்நிலையில், பாகுபலி வெற்றிக்கு என்று மீண்டும் இணைவார்கள் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருந்த இந்த ஜோடி, தற்போது மீண்டும் திரையில் இணைவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


முழு நீள காமெடி படம்


நடிகர் பிரபாஸின் சலார், ஆதி புருஷ், ’ப்ராஜெக்ட் கே’ படங்கள் வரிசைக்கட்டி ரிலீசாக உள்ள நிலையில், விரைவில் இயக்குநர் மாருதியின் முழு நீள காமெடி படம் ஒன்றில் இருவரும் இணைவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


பாகுபலி படத்துக்குப் பிறகு பான் இந்தியா ஆடியன்ஸ்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களான சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன.


அதேபோல் அனுஷ்கா நடித்த பாகமதி, நிஷப்தம் படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் இவர்கள் இருவரும் பெரும் எதிர்ப்பார்ப்புக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு தசரா சமயத்தில் வெளியாகலாம் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.


மேலும் படிக்க: Ponniyin selvan: 'வருகிறான் சோழன்... சாகசத்துக்குத் தயாராகுங்கள்’ - வந்தது ’பொன்னியின் செல்வன்’ அப்டேட்!


 


Amala Paul : ‛குழந்தை பெத்துக்க, 8 ஆண்டு போராட்டம்... அடுத்தடுத்து கருக்கலைப்பு ...’ -அமலா பால் பகிர்ந்த பதிவால் அதிர்ந்த ரசிகர்கள்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண