வனிதா விஜயகுமார் :


வனிதா என்றால்  பெரிய அறிமுகம் தேவையில்லை. அவ்வபோது சமூக வலைத்தளங்களில் டாக் ஆஃப் தி டவுனாக இருப்பவர் வனிதா. நடிகையாக அறியப்பட்ட வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக கவனம் பெற்றார். நடிப்பிலிருந்து நீண்ட பிரேக் எடுத்தவர்  தற்போது மீண்டும் நடிக்க  தொடங்கியிருக்கிறார். ஒரு பக்கம் சின்னத்திரை , மறுபக்கம் வெள்ளித்திரை இடையிடையே யூடியூப் , சொந்த பிஸினஸ் என படு பிஸியாக இருக்கும் வனிதா தற்போது தனது அண்ணன் அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.






குடும்ப பிரச்சனை :


வனிதாவிற்கு அவரது அப்பா விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவிற்கும் இடையில் இருந்த பிரச்சனைகள் குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மீடியாவில்தான் வனிதா தனது கோரிக்கையை வைத்தார். சொத்து பிரச்சனையில் ஆரமித்த விவகாராம் பூதாகரமானது.  மகன் ஸ்ரீஹரி தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் சூழலில் வனிதா தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு அருண் விஜயை டேக் செய்த வனிதா “ ஒரு உண்மையான ஹீரோ தனது சொந்த சகோதரியை காயப்படுத்தவோ ஏமாற்றவோ மாட்டார். உங்களாலும் என் சகோதரிகளாலும் நானும் எனது குழந்தைகளும் அவமானப்படுத்தப்பட்டோம்.” என அவரை சாடி பதிவிட்டிருந்தார். அந்த பதிவு இன்னும் நீக்கப்படாத நிலையில் அதே வனிதா தனது அண்ணனை தற்போது புகழ்ந்து பேசியிருக்கிறார்.






யானை :


இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் யானை . இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.இந்த நிலையில் வனிதா தனது அண்ணன் அருண் விஜயின் புகைப்படத்தை பகிர்ந்து “கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது. யானை படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் ”என தெரிவித்துள்ளார்.