கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது வெக்கேஷனுக்கு நம்மில் பலர் ஜில்லென ஒரு இடத்தை வெக்கேஷனுக்காக தேர்வு செய்ய ஆசைப்படுவோம் அப்படியான டாப் 5 இடங்களைதான் இங்கே தொகுத்துள்ளோம்


மேகமலை :


நம்ம ஊரில் இருக்கும் சிறப்பான ஒரு கோடைக்கால ஸ்பாட்தான் மேகமலை .  இது ஒரு மலைத்தொடர் - மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தேயிலைத் தோட்டங்கள், மூடுபனி மலைகள், பிரமிக்க வைக்கும் பசுமையான இயற்கைக் காட்சிகள், ஹேர்பின் வளைவுகள், ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் அவ்வபோது மழை என உங்கள் மனதை குளுமையாக்கும் சூப்பர் ஸ்பாட்.






பூக்களின் பள்ளத்தாக்கு (Valley Of Flowers)



ஆங்கிலத்தில் Valley Of Flowers என அழைக்கப்படும் இந்த இடமானது உத்திரகாண்ட் மாநிலம் மேற்கு இமையமலை பகுதியில் அமைந்துள்ளது. அரிதான மற்றும் கவர்ச்சியான இமயமலை தாவரங்களின் தாயகமாக உள்ளது - அவை மழைக்காலத்தில் முழுமையாக பூக்கும்.ஜூன் 1 முதல் அக்டோபர் வரை சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கும். புஷ்பாவதி ஆற்றின் குறுக்கே உள்ள அடர்ந்த காடுகள் வழியாக சுற்றுலாப் பயணிகளை இந்த பகுதிக்கு அழைத்து செல்கிறது.  வழியில் பல பாலங்கள், பனிப்பாறைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கடந்து  நாம் இந்த பகுதிக்கு சென்றடையலாம்.



Lonavala :


இது மகாராஸ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சூப்பரான மலைப்பகுதி .இதற்கு குறிப்பிட்ட காலம் என்பதல்லாம் தேவையில்லை . வருடம் முழுவதுமே இது ஒரு சுற்றுலா தளமாகத்தான் இருக்கிறது. மும்பை வாசிகள் பலரும் வீக் எண்டை கொண்டாட இங்குதான் விரைகிறார்கள். இனிமையான காலநிலை, பசுமையான பள்ளத்தாக்குகள், காடுகள்,பசுமை, வால்ட்ஸிங் நீர்வீழ்ச்சிகள் மற்றும் கண்கவர் குகைகள் என உங்கள் மனதை கவர் ஏராளமான விஷயங்கள் உள்ளன.லா குகைகள், லோகட் கோட்டை மற்றும் பாஜா குகைகள் இங்கு பிரபலம்.







தெற்கு கோவா :


கோவா என்றதுமே நமக்கு நினைவிற்கு வருவது பார்ட்டிதான். ஆனால் அதையும் தாண்டி , மக்கள் ஆராவாரம் இல்லாமல் அமைதியான ஒரு இடம் இருக்கிறது. அதுதான் தெற்கு கோவா .போ டி ராமா கோட்டைக்கு அருகிலுள்ள பலோலம் பீச், கோலா பீச், பட்டர்ஃபிளை பீச் மற்றும் பெப்பிள் பீச் போன்ற அழகிய மற்றும் நெரிசல் குறைவான கடற்கரைகளை இங்கே காணலாம். கூடுதலாக, கதீட்ரல்கள், கோயில்கள், போர்த்துகீசிய கலாச்சாரம், சிறிய கிராமங்கள் மற்றும் ருசியான உணவும் கிடைக்கிறது.


டார்ஜிலிங் :


பேரை கேட்கும் பொழுதே சிலருக்கு சில்லென்ற அனுபவம் கிடைத்திருக்கலாம் . பலரும் விரும்பும் சுற்றுலா தளம் . பசுமையான தேயிலை தோட்டங்கள், பனி படர்ந்த மலைகள், வினோதமான கட்டிடக்கலை மற்றும்  மக்களின் அன்பான விருந்தோம்பல் ஆகியவை டார்ஜிலிங் பக்கம் மக்கள் படையெடுக்க காரணம். மழைக்காலத்தில் பார்க்க ஒரு  வெள்ளைப்போர்வை போர்த்தியது போல இருக்கும் நகரம் ஆனாலும் பெரும்பாலும்  டார்ஜிலிங் மழைக்காலத்தில் குறைவான சுற்றுலாப் பயணிகளைத்தான் ஈர்க்கிறது. அமைதியான இடம்.