AyalaanTrailer ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அயலான் படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் படத்தில், யோகிபாபு, கருணாகரன் என பலர் நடித்துள்ளனர்.


கொரோனா பரவலுக்கு  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இவர்கள் மட்டுமில்லாமல் படத்தில் யோமுன்பாக 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் படம் பட்ஜெட் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு முடிந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 12-ஆம் தேதி அயலான் படம் ரிலீசாக உள்ளது. பான் இந்தியா படமாக பல்வேறு மொழிகளில் வெளிவரும் அயலான் படம் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 


இந்த நிலையில் படம் ரிலீசாவதை ஒட்டி, அயலான் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில், ”வழக்கமாக அமெரிக்காவை தான அழிக்க வருவீங்க. இப்போ ஏன் எங்க நாட்டுக்கு வந்து இருக்கீங்கன்னு” ஏலியனை பார்த்து சிவகார்த்திகேயன் கேட்கும் காட்சிகளும், பூமி மேல் மனிதர்களுக்கு கவலை இருக்காது போன்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளன. 






முன்னதாக  ஏலியன் ஜானரில் உருவான அயலான் படத்தின் டீசர் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் ரிலீஸ்க்கு சில நாட்களே உள்ளதால் புரோமோஷன் வேலைகளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடத்தி வருகின்றது. இதற்கிடையே கடந்த வாரம் அயலான் படத்தின் இசைவெளியீட்டு விழா  எளிமையாக  நடத்தி முடிக்கப்பட்டது. சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் மாரி செல்வராஜ், ஏ.ஆர். ரஹ்மான், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக புதுப்படங்கள் ரிலீசாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ், அருண் விஜய் நடித்த மிஷின் சாப்டர்-1, சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன.