கேப்டன் மில்லர்


தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளத் திரைப்படம் கேப்டன் மில்லர். சந்தீப் கிஷன் , ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் நாளை 6-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.