Mission Chapter1: ரஜினி, தனுஷ் படங்களோடு களம் காணும் அருண் விஜய்.. பொங்கல் ரிலீஸில் போட்டா போட்டி..!

Mission Chapter1: இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே' படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Continues below advertisement
Mission Chapter1: லைகா புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1 - அச்சம் என்பது இல்லையே’ படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே' படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. சமீபத்தில் வெளியான அதன் டீசர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். படத்தின் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன் பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளனர். படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. 

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதால் விரைவில் ட்ரைய்லர் மற்றும் ஆடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், ” பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது.
 
70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அருண் விஜய் நடிக்கும் இந்த படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா என பலரும் நடித்துள்ளனர்.  படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் பணியை அந்தோணி செய்து வருகிறார். 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola