'மிக்ஜாம்' புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தன்னார்வலர்கள் உணவு குடிநீர் உள்ளிட்டவைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர். 

சென்னைக்கு உதவி கேட்டா தயவு செய்து கொடுங்க

சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட உதவிகளை தனது தனிப்பட்ட முயற்சியில் சின்னத்திரை பிரபலம் அறந்தாங்கி நிஷா மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது: ”நேற்றிலிருந்து கிட்டத்தட்ட டாடா ஏசி மற்றும் பெரிய கார்களுக்குக்கு கால் பண்ணோம். சென்னை என்பதால் யாருமே கொடுக்கவில்லை.

இத்தனைக்கும் வாடகைக்கு தான் கேட்டோம். வேற வழி இல்லாம இவ்ளோ தான் நம்ம கார்ல உட்கார முடியும். வேற வழி இல்ல. உதவிப்பொருள்கள் கொடுத்தே ஆகணும். ஆயிரம் உணவு பொட்டலம் தாம்பரத்துல ரெடி பண்ண சொல்லிட்டோம். அங்க வேற வாங்கணும்.  அங்க ஒரு டாட்ட ஏசிய 11 மணிக்கு மேல தரேன்னு சொல்லி இருக்காங்க. கால் பண்ண சொல்லி இருக்காங்க. யாராவது சென்னைக்குனு உதவி கேட்டா தயவு  செய்து செஞ்சி கொடுங்க. வெள்ளத்துல அப்டியே போய்டாது வண்டி. இப்போ எங்க கார் போய்ட்டு திரும்ப வரும். அதை நான் உங்க கிட்ட காட்டுறேன்” என்று அவர் பேசியுள்ளார். 

மேலும் படிக்க

Half Yearly Exam Postponed: மழை பாதிப்பு: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு

UGC EXAM : புயல் பாதிப்புக்கு நடுவே சென்னையில் யுஜிசி நெட் தேர்வு; மாணவர்கள் வேதனை- ஒத்திவைக்கக் கோரிக்கை!

School, Colleges Leave: சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் நிலை என்ன? - முழு விவரம்!