தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 21.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


22.06.2023 மற்றும் 23.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):    


குன்றத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்), தரமணி ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்) தலா 8, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம் மாவட்டம்), சிதம்பரம் அவுஸ் (கடலூர் மாவட்டம்), அண்ணாமலை நகர் (கடலூர் மாவட்டம்), சிதம்பரம் (கடலூர் மாவட்டம்), மின்னல் (இராணிப்பேட்டை மாவட்டம்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை மாவட்டம்), டிஜிபி அலுவலகம் (சென்னை மாவட்டம்) தலா 7, சோழிங்கநல்லூர் (சென்னை மாவட்டம்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்), திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்), பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்), எம்ஜிஆர் நகர் (சென்னை மாவட்டம்), குறுவட்டு மருத்துவமனை தொண்டைப்பேட்டை (சென்னை மாவட்டம்), புவனகிரி (கடலூர் மாவட்டம்), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை மாவட்டம்) , அண்ணா பல்கலைக்கழகம், சென்னை நுங்கம்பாக்கம் தலா 6, செங்கல்பட்டு, சத்யபாமா பல்கலைக்கழகம் ஏஆர்ஜி (செங்கல்பட்டு மாவட்டம்), திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்), சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடம் (சென்னை மாவட்டம்), ஆவடி (மாவட்டம் திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்), அம்பத்தூர் (திருவள்ளூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) ), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை மாவட்டம்), ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்), ஒய்எம்சிஏ நந்தனம், ஏசிஎஸ் கல்லூரி (காஞ்சிபுரம் மாவட்டம்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  


கடலில் இருந்து மேகக்கூட்டங்கள் நகர் பகுதிக்குள் நகர்ந்து வருவதால் அவ்வப்போது மிதமான மழை இருக்கும் என்றும் நேற்றைய தினம் போல் தீவிர மழை இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் ஜூன் மாத மழை 295 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் பெய்யக்கூடிய அதிகபட்ச மழையின் அளவு என்பது 4 செ.மீ ஆகும். ஆனால் கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நேற்றைய முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவானது. நேற்று சுமார் 6 செ.மீ வரை மழை பதிவானது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு ஜூன் மாதம் 295 சதவீதம் சென்னைக்கு அதிக மழை கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.